பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைகிறார் இயக்குநர் சசிக்குமார்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
director sasikumar in petta, இயக்குநர் சசிக்குமார்

director sasikumar in petta, இயக்குநர் சசிக்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் சசிக்குமார் இணைந்து நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. ஏற்கனவே, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, சோமசுந்தரம், மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளம் இணைந்துள்ளது.

பேட்ட படத்தில் இயக்குநர் சசிகுமார் :

இந்நிலையில், புதிதாக நடிகரும், இயக்குநருமான சசிக்குமார் ‘பேட்ட’ படத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements
October 2018

‘பேட்ட’ படத்தின் ஷூட்டிங் டார்ஜிலிங், டேராடூன், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வாரணாசியில் த்ரிஷா மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படத்தில் கூடுதலாக சசிக்குமாரும் இணைந்திருப்பது, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Sasikumar Tamil Cinema Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: