Advertisment
Presenting Partner
Desktop GIF

Game Changer Movie Review Live Updates: டீசண்டான முதல் பாதி: ஓகேவான 2-ம் பாதி: கேம் சேஞ்சர் முழு படம் எப்படி?

Game Changer Movie Review and Rating Live Updates: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 10) வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து விமர்சனங்களை தெரிந்துகொள்ள இந்த பதிவில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Game Changer Ram Chanran

Ram Charan Game Changer Movie Review, Rating, Release Live Updates: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரேடுத்தவர் சங்கர். தமிழிர் பல படங்களை இயக்கியுள்ள இவர் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். ராம் சரண் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், கியாரா அத்வானி நாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

Advertisment

அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தற்கு, தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள இந்த படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 10) பான் இந்தியா பாடமாக வெளியாகியுள்ளது.

சங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், கேம் சேஞ்சர் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

  • Jan 10, 2025 16:11 IST
    கேம் சேஞ்சர் 'ராம் சரணின் ஒன் மேன் ஷோ'

    திரைப்பட விமர்சகர் அமுதா பாரதி கேம் சேஞ்சர் படம் பற்றிய தனது கருத்தில், "இது ஒன்மேன்  ராம்சரண் ஷோ, இரண்டு கதாபாத்திரங்களிலும் திடமான நடிப்பை பல இடங்களில் கொடுத்திருக்கிறார். தமனின் அருமையான இசை, பல இடங்களில் அவர் காட்சியை உயர்த்தினார் எஸ்.ஜே.சூர்யா கேரக்டர் சிறப்பாக எழுதியிருக்க வேண்டும்  ஒட்டுமொத்தமாக ஷங்கர் இந்தியன் 2 ஐ விட சிறப்பாக கொடுத்துள்ளர் என்ற பதிவிட்டுள்ளார்.



  • Jan 10, 2025 14:25 IST
    கேம் சேஞ்சர் டே 1 பாக்ஸ் ஆபிஸ் எதிர்பார்ப்ப என்ன?

    Sacnilk.com வெளியிட்டுள்ள பதிவில், கேம் சேஞ்சர் அதன் முதல் நாளில் இந்தியாவில் 14.66 கோடி வசூலித்துள்ளது. கேம் சேஞ்சர் டே 1 பாக்ஸ் ஆபிஸ் வசூல் மாலையில் வசூல் செய்தால் ரூ.50 கோடி வரை வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Advertisment
    Advertisement
  • Jan 10, 2025 14:23 IST
    படம் பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் ஷங்கரின் இயக்கம் வியத்தகு கதை

    SIIMA இன் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,, "கேம் சேஞ்சர் படம்  ஊழலை எதிர்கொண்டு, தனது வழிகாட்டியான அப்பண்ணாவுடன் ஆழமான உணர்வுப்பூர்வமான உறவுகளை வெளிப்படுத்தி, முதலமைச்சராக மாறிய ஐஏஎஸ் அதிகாரியான ராம் நந்தனைப் பின்தொடரும் காட்சிப் பிரமாண்டமான அரசியல் நாடகம். ராம் சரண் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்துகிறார், ஆனால் எஸ்.ஜே இந்த கதை தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பரிச்சயமானதாக உணர்ந்து அதற்கேற்ப நடித்துள்ளார். இந்த படம் பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் ஷங்கரின் இயக்கம் வியத்தகு கதையை உள்ளடக்கியது, இது ராம் சரண் மற்றும் அரசியல் படங்களின் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்ற பதிவிட்டுள்ளது.



  • Jan 10, 2025 13:18 IST
    டீசண்டான முதல் பாதி: ஓகேவான 2-ம் பாதி: கேம் சேஞ்சர் முழு படம் எப்படி?

    முதல் பாதி நன்றாக இருக்கிறது. உதட்டு ஒத்திசைவு பிரச்சனைகள் மற்றும் கல்லூரி காட்சிகள் தகாரா தொல்லை தரும் திரைக்கதை. 2-ம் பாதி ஓகே அப்பண்ணாவாக ராம் சரண், ரொம்ப நல்லா இருக்கு, பிளாஷ்பேக் போர்ஷன்ஸ் ஓரளவுக்கு பரவாயில்லை.மொத்தத்தில் அந்த முதல் பாதி மற்றும் ஃப்ளாஷ்பேக் போர்ஷன்களை ஒரு முறை பார்க்கலாம்.



  • Jan 10, 2025 12:29 IST
    கேம் சேஞ்சரைப் பார்த்த பிறகு இந்தியன் 2 மீதான மரியாதை அதிகரித்தது ஷங்கர் சார்: எக்ஸ் பதிவு

    கேம் சேஞ்சரைப் பார்த்த பிறகு இந்தியன் 2 மீதான மரியாதை அதிகரித்தது . ஷங்கர் சார் என்று ஒருவர் பதிவிட்டுள்ளர்.



  • Jan 10, 2025 12:04 IST
    கேம் சேஞ்சர் 'சரியான குடும்ப அரசியல் நாடகம்'

    ஒரு நெட்டிசன் தனது எக்ஸ் பக்கத்தில், ராம் சரணின் கேம் சேஞ்சர் ஒரு சரியான குடும்ப அரசியல் நாடகம், இது சிறந்த உணர்ச்சி ஆழம், மதிப்புகள் மற்றும் பிளாக்பஸ்டர் பேச்சுடன் சங்கராந்தி பாக்ஸ் ஆபிஸைத் தொடங்கியது. குறிப்பாக ராம் சரண் இந்த படத்தில் அனைத்து மாறுபாடுகளிலும் சிறப்பாக நடித்துள்ளார் என்ற கூறியுள்ளார்.



  • Jan 10, 2025 11:56 IST
    ஆன்லைனில் கசிந்த கேம் சேஞ்சர்: படக்குழுவினர் அதிர்ச்சி

    ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில், வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம், வெளியான சில மணிநேரங்களில் ஆன்லைனில் கசிந்தது. தமிழ்ராக்கர்ஸ், மூவிருல்ஸ், ஃபிலிம்ஜில்லா மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட மோசமான தளங்களில் அங்கீகரிக்கப்படாத நகல்களைப் பரப்புவதால், இந்தத் திரைப்படம் மோசடியாளர்களின் தற்போதைய இலக்காக மாறியுள்ளது.



  • Jan 10, 2025 10:50 IST
    யூகிக்கக்கூடிய அரசியல் படம்: பழைய ப்ளாஷ்பேக்; கேம் சேஞ்சர் விமர்சனம்

    கேம்சேஞ்சர்-வழக்கமான யூகிக்கக்கூடிய அரசியல் நாடகம். ராம்சரண் நடிப்பு & எஸ்.ஜே.சூர்யா ஸ்வாக் நன்றாக வொர்க்அவுட் ஆகியள்ளது. தமன் பின்னணி இசை ஓரளவுக்கு டீசன்டாக உள்ளது. இடைவேளை காட்சி சிறப்பாக இருந்தாலும் க்ளைமேக்ஸ் இழுத்தடிக்கப்பட்டது மாதிரி இருக்கிறது. பாடல்களுக்கு 75 கோடி ஆனால் முக்கிய பாடல் சேர்க்கப்படவில்லை!! ஃப்ளாஷ்பேக் போர்ஷன் பல பழைய கதைகள் போன்று இருக்கிறது.



  • Jan 10, 2025 10:45 IST
    பவர்ஃபுல் ராம் சரண்... எஸ்.ஜே.சூர்யா வித்தியாசம்: கேம் சேஞ்சர் எப்படி?

    கேம் சேஞ்சர் படத்தில், நடிகர் ராம்சரண் பவாஹவுஸ் பர்பாமன்ஸ் கொடுத்துள்ளதாகவும், வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூா்யா வழக்கம்போல் தனது வித்தியாசமான நடிப்பை கொடுத்த்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 



  • Jan 10, 2025 10:09 IST
    ராம் சரணின் என்டரி சீன் 

    படத்தில் ராம் சரணின் என்டரி சீன் 



  • Jan 10, 2025 08:58 IST
    சுமாரான திரைக்கதை

    வசனங்கள் நன்றாக எழுதப்பட்டுள்ளன, மேலும் "ஜரகண்டி" மற்றும் "தோப்" பாடல்கள் திரையில் நன்றாக உள்ளது. படத்தில் சில நன்றாக இருந்தாலும், கதை மற்றும் திரைக்கதை சுமாராக உள்ளது. எஸ்.ஜே சூர்யா,தமன் இசை படத்தின் முதுகெலும்பு என்று X பயனர் ஒருவர் கூறியுள்ளார். 3.25/5  என ரேட்டிங் கொடுத்துள்ளார். 



  • Jan 10, 2025 08:54 IST
    சங்கராந்திக்கு ஒரு சரியான விருந்து 

    இயக்குநர் ஷங்கரின் அரசியல் படம்.  படத்தின் முதல் பாதியில் வலுவான சமூக செய்தியை ஷங்கர் கூறியுள்ளார். இரண்டாம் பாதி ஃப்ளாஷ்பேக் பகுதியில் ராம் சரணின் பெர்ஃபார்மன்ஸ் சிறப்பாக உள்ளது. ஃப்ளாஷ் பேக் போர்ஷன் இரண்டாம் பாதியின் முதுகெலும்பு.  அப்பண்ணாவாக ராம் சரண் மற்றம் அஞ்சலியின் பார்வதி கதாபாத்திரம் சிறந்த சித்தரிப்பு. 

    தமனின் இசை அடுத்த லீக்கிற்கு கொண்டு செல்கிறது. பாடல்கள் பிரம்மாண்டம். வழக்கம் போல் எஸ்.ஜே சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்.  DHOP பாடல் நன்றாக உள்ளது. 



Director Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment