மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் ஊழல் உளளிட்ட பல்வேறு சமூக தீமைகள் குறித்த பேசப்பட்டன. படத்தின் அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை பெரிதும் பேசப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கவில்லை. அவருக்கு பதிலாக அனிருத் இசையமைத்துள்ளார்.
இதற்கும் சில ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். “தாத்தா வர்ராரு கதற விடப் போறாரு” என்ற பாடலும் நெட்டிசன்கள் கைகளில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்காதது ஏன் என இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “ஏ.ஆர். ரஹ்மான் எந்திரன் 2.O பட பின்னணி இசைக் கோப்பு பணிகளில் ஏ.ஆர். ரஹ்மான் கடினமாக பணியாற்றி கொண்டிருந்தார். அந்நேரம், இந்தியன் 2 படத்தின் பாடல்கள் தேவைப்பட்டன. அப்போது அவரிடம் இதை கேட்கமுடியவில்லை. எனக்கு அனிருத் இசை பிடித்திருந்தது. அதனால் அவரிடம் கொடுத்தோம். எனக்கு அனிருத் மட்டுமல்ல, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் இசை அமைப்பும் பிடிக்கும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“