பிடித்த நடிகை அவராமே… அப்போ ஒற்றைப் பாடலுக்கு டான்ஸ் ஆடுவாரா அதிதி?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி விருமன் படம் மூலமாக நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

பிடித்த நடிகை அவராமே… அப்போ ஒற்றைப் பாடலுக்கு டான்ஸ் ஆடுவாரா அதிதி?
விருமன் பட கதாநாயகி அதிதி ஷங்கர்

தமிழ் சினிமாவில் இன்றைய ஹாட் டாக் புதுவரவு அதீதி தாங்க. விருமன் படத்தில் நடித்தாலும் நடித்தார் இவரை கஞ்சா பூ கண்ணழகி என்றே பலரும் வர்ணிக்க தொடங்கிவிட்டனர்.

விருமன் படத்தில் இவர் நடித்த காதல் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், அதிதி அண்மையில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

அந்தப் பேட்டியில், தனக்கு பிடித்த நடிகர் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றார். தொடர்ந்து பிடித்த நடிகை குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பலரும் அவர் நடிகை நயன்தாராவை சொல்வார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவரே சட்டென்று நடிகை சமந்தா என்று கூறிவிட்டார்.

சென்னையை பூர்விகமாக கொண்ட சமந்தா, அண்மை காலமாக மிகவும் போல்ட் ஆன கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். மேலும் நடிப்பிலும் ராட்சசி ஆக திகழ்ந்துவருகிறார்.

இவர் அண்மையில் வெளியாகி சக்கைப் போடு போட்ட இந்திய (PAN) அளவிலான திரைப்படமான புஷ்பாவில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார்.
இந்தப் பாடலை பார்த்து பெண்கள் கூட சமந்தாவை விரும்பினர் என்றே கூறலாம். ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றீயா மாமா எனத் தொடங்கும் அந்தப் பாடல் ஆண்ட்ரியாவின் குரலில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் ஒலித்தது.

இந்த நிலையில் அதிதி தனக்கு சமந்தாவை பிடிக்கும் எனக் கூறியது, அவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவாரா என்றும் ரசிகர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
ஆதிதி தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் என்ற படத்தில் நடித்துவருகிறார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி விருமன் படம் மூலமாக நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Director shankars youngest daughter adithi latest interview