பங்காளி கட் பண்ணாத... டப்பிங்ல பாத்துக்கலாம்; இந்த டையலாக் தான் அந்த ஹிட் சீன்: உண்மை உடைத்த தலைநகரம் இயக்குனர்!

இப்படத்தில், நானும் ரௌடி தான் என்று வடிவேலு பேசிய வசனம் பெரும் வைரலானது. இப்போது வரை நிறைய மீம்களில் இந்த காமெடி உலா வருகிறது. இந்நிலையில், இந்த வசனம் உருவான விதம் குறித்து தலைநகரம் திரைப்படத்தின் இயக்குநர் சுராஜ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Thalainagaram movie

சினிமாவை பொறுத்த வரை பிறவிக் கலைஞன் என்று சிலரை கூறுவார்கள். அந்த வரிசையில் வடிவேலு நிச்சயம் இடம் பிடிப்பார். அந்த அளவிற்கு அவர் ஏற்று நடிக்கும் பாத்திரங்கள் அனைத்திலும் தனது தனித்துவமான வசனம் மற்றும் உடல்மொழி மூலம் உயிர் கொடுக்கும் ஆற்றல் வடிவேலுவிற்கு இருக்கிறது.

Advertisment

வடிவேலுவின் திறமைகளை ஆரம்ப காலத்திலேயே கண்டுகொண்ட கமல்ஹாசன், தேவர் மகன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தை அவருக்கு வழங்கி இருப்பார். வடிவேலுவும் அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

ஆனால், அதன் பின்னர் அதற்கு மாறாக முற்றிலும் காமெடி பாத்திரங்களில் வடிவேலு கலக்கினார். பல திரைப்படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே ஓடியது என்று கூறினாலும் மிகையாகாது. இன்று வரை காமெடி சேனல்களில் அதிகமாக ஒளிபரப்பாகும் காமெடி காட்சிகள் வடிவேலுவுடையது தான்.

இதன் பின்னர், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தின் ஹீரோவாக வடிவேலு நடித்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு படங்களில் ஹீரோவாகவே நடித்திருந்தாலும், காமெடியன் வடிவேலுவை ரசிகர்கள் மிஸ் செய்தனர். அதன் பின்னர், மாமன்னன் படத்தின் வாயிலாக வடிவேலு கம்பேக் கொடுத்தார்.

Advertisment
Advertisements

ஆனால், தனது பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தார். இதற்கடுத்து, சுந்தர். சி இயக்கத்தில் வெளியான கேங்கர்ஸ் படத்தில் பழைய காமெடியன் வடிவேலுவை ரசிகர்கள் கண்டனர்.

வடிவேலுவின் திரைப்பயணத்தில் தலைநகரம் படம் மிகவும் முக்கியமானது. சுந்தர். சி ஒரு நடிகராக களமிறங்கிய இப்படத்தில், நாய் சேகர் என்ற பாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பார். கைப்புள்ள, என்கவுண்டர் ஏகாம்பரம் போன்ற பாத்திரங்களுக்கு இணையாக இந்த நாய் சேகர் கேரக்டரும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

இப்படத்தில், நானும் ரௌடி தான் என்று வடிவேலு பேசிய வசனம் பெரும் வைரலானது. இப்போது வரை நிறைய மீம்களில் இந்த காமெடி உலா வருகிறது. இந்நிலையில், இந்த வசனம் உருவான விதம் குறித்து தலைநகரம் திரைப்படத்தின் இயக்குநர் சுராஜ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, "தலைநகரம் திரைப்படத்தில் ஹைலைட்டாக பேசப்பட்ட பல வசனங்களை, டப்பிங்கில் தான் வடிவேலு பேசினார். உதாரணமாக, போலீஸ் ஜீப்பில் ஏறி செல்லும் போது, 'பங்காளி கட் பண்ணாத... டப்பிங்கில் பாத்துக்கலாம்' என்று வடிவேலு கூறினார். ஆனால், டப்பிங்கின் போது அந்த இடத்தில் 'நானும் ரௌடி தான்' என்று வடிவேலு பேசினார். டப்பிங்கில் வடிவேலு இயல்பாக பேசிய வசனம் பெரும் ஹிட்டானதுடன், ஒரு திரைப்படத்திற்கு டைட்டிலாக அந்த வசனத்தை வைக்கும் அளவிற்கு ஃபேமஸ் ஆனது.

Vadivelu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: