/tamil-ie/media/media_files/uploads/2020/01/a41-2.jpg)
director suseenthiran met accident admitted in hospital - விபத்தில் சிக்கிய இயக்குனர் சுசீந்திரன் - மருத்துவமனையில் அனுமதி
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து; புதிதாக தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன், நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, கென்னடி கிளப் போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சுசீந்திரன், தனது அடுத்த கட்ட படத்திற்காக சமூக வலைதளத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வெளியேறினார்.
இந்நிலையில், இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்ற இயக்குனர் சுசீந்திரன், எதிர்பாராத விதமாய் ஒரு வாகனத்தால் மோதப்பட்டு காயமடைந்தார். வாகனம் மோதியதால் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதையடுத்து உடனடியாக லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் மூன்று வாரங்கள் ஓய்வு பெற வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.