இந்தப் படத்தில் குஷ்புவை கதாநாயகியாக போட பிரபு வீட்டில் எதிர்ப்பு: பிரபல இயக்குனர் உடைத்த ரகசியம்

பிரபுவிற்கு ஜோடியாக குஷ்புவை நடிக்க வைக்க வேண்டாம் என்று பிரபுவின் மனைவியே தன்னிடம் கூறியதாக பழம்பெரும் இயக்குநர் வி. சேகர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சினிமா ரசிகர்கள் பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

பிரபுவிற்கு ஜோடியாக குஷ்புவை நடிக்க வைக்க வேண்டாம் என்று பிரபுவின் மனைவியே தன்னிடம் கூறியதாக பழம்பெரும் இயக்குநர் வி. சேகர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சினிமா ரசிகர்கள் பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Kushboo and Prabhu

நடிகர் பிரபுவிற்கு ஜோடியாக குஷ்புவை போட வேண்டாம் என்று அவரது மனைவி தன்னிடம் கோரிக்கை முன்வைத்ததாக, பழம்பெரும் இயக்குநர் வி. சேகர் தெரிவித்துள்ளார். மீடியா சர்கிள் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த நேர்காணலின் போது, இந்த தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் குடும்பம் சார்ந்த திரைப்படங்கள் எடுக்கும் இயக்குநர்களில், வி. சேகருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இவரது திரைப்படங்களில் அதிகமான வன்முறை இடம்பெறாது என்பதால், பலருக்கு விருப்பமான இயக்குநராக வி. சேகர் திகழ்ந்தார். இவரது திரைப்படங்களில் சென்டிமென்டுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு காமெடிக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

இவரது இயக்கத்தில் வெளியான 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நான் பெற்ற மகனே', 'காலம் மாறிப் போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்'  போன்ற திரைப்படங்கள், இன்றளவும் ரசிகர்களுக்கு விருப்பமானதாக இருக்கின்றன. இந்நிலையில், நடிகர் பிரவுவை வைத்து தாம் இயக்க இருந்த திரைப்படம் கைவிடப்பட்டது குறித்தும், அதற்கான காரணத்தையும் வி. சேகர் மனம் திறந்து கூறியுள்ளார். மேலும், பிரவுவின் மனைவி தன்னிடம் வைத்த கோரிக்கையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, "பிரபுவை ஹீரோவாக கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டிருந்தேன். அன்றைய காலகட்டத்தில் குஷ்புவை, பிரபு திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஒரு வதந்தி பரவியது. எனினும், அப்போது பிரவுவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது. 

Advertisment
Advertisements

 

V Sekar

 

அந்த நேரத்தில் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு விருந்துக்காக நான் சென்றேன். அப்போது, பிரபுவை வைத்து நான் படம் இயக்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவரது மனைவி என்னிடம் தெரிவித்தார். மேலும், நான் இயக்கிய திரைப்படங்கள், அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

ஆனால், அப்படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக குஷ்புவை நடிக்க வைக்க வேண்டாம் என்று அவரது மனைவி என்னிடம் தெரிவித்தார். பிரபுவின் மனைவியே இவ்வாறு கூறியதால், அப்படத்தில் குஷ்புவிற்கு பதிலாக மீனாவை நடிக்க வைக்க முடிவு செய்தேன். இவ்வாறு செய்ததால், பிரபு கோபமடைந்தார்.

 

 

எனக்கு கிடைக்கும் பணம், சம்பளம் ஆகியவற்றை விட, ஒரு குடும்பத்தினருக்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். மேலும், என்னிடம் குஷ்பு குறித்து பேசியதற்காக, தனது மனைவியை பிரபு திட்டினார். இதனால், அப்படத்தை எடுக்க முடியவில்லை. எனக்கு கொடுத்த சம்பளத்தை திருப்பி செலுத்த வேண்டிய நிலை வந்தாலும், ஒரு குடும்பத்தின் பிரச்சனை தடுக்கப்பட்டதால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்" என வி. சேகர் தெரிவித்துள்ளார்.

kushbhu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: