ரஜினி - கமல் நடிக்கிறதே இல்ல... கை, கால் மட்டும் ஆட்டுறாங்க; ஆனா பிஸினஸ் 300 கோடி: பிரபல ஃபேமிலி இயக்குனர் பேச்சு!
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் தற்போதைய திரைப்படங்கள் குறித்து பழம்பெரும் இயக்குநர் வி. சேகர் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். அவர்களது ஆரம்ப கால படங்கள் தான் நன்றாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் தற்போதைய திரைப்படங்கள் குறித்து பழம்பெரும் இயக்குநர் வி. சேகர் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். அவர்களது ஆரம்ப கால படங்கள் தான் நன்றாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி மற்றும் கமலின் ஆரம்ப கால திரைப்படங்கள் அளவிற்கு இப்போது அவர்கள் நடிப்பதில்லை எனவும், மக்களின் எதிர்பார்ப்பை அவர்களுடைய படங்கள் பூர்த்தி செய்யவில்லை என்றும் பழம்பெரும் இயக்குநர் வி. சேகர் தெரிவித்துள்ளார். சேனல் 5 சினிமா என்ற யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் ஃபேமிலி டிராமா வகையான படங்கள் எடுப்பதில் முக்கியமான இயக்குநராக வலம் வந்தவர் வி. சேகர். கடந்த 1990-ஆம் ஆண்டு வெளியான 'நாங்களும் ஹீரோதான்' என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வி. சேகர், அதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
குறிப்பாக, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, கோவை சரளா ஆகியோரை தனது படங்களில் முதன்மை பாத்திரங்களாக வைத்து காமெடிக்கும், சென்டிமென்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை அவர் இயக்கி இருக்கிறார். இதற்கு உதாரணங்களாக, 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நான் பெற்ற மகனே', 'காலம் மாறிப் போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்' போன்ற படங்களை கூறலாம்.
Advertisment
Advertisements
இந்நிலையில், சமீபத்தில் வி. சேகர் அளித்த நேர்காணலில், ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் படங்கள் குறித்து விமர்சனத்தை முன்வைத்தார். அதில், "ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருக்கும் வயதாகி விட்டது. குறிப்பாக, அப்பா, தாத்தா போன்ற கதாபாத்திரங்களில் தான் அவர்கள் நடிக்க வேண்டும். ஆனால், காலத்திற்கு ஏற்ற வகையில் இருவரும் தங்களை மாற்றிக் கொண்டனர்.
அவர்களுடைய ஆரம்ப கால படங்களான 16 வயதினிலே, முள்ளும் மலரும் ஆகியவற்றில் இருவரும் உயிரைக் கொடுத்து நடித்திருப்பார்கள். அவர்களது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் பல நல்ல படங்கள் அமைந்தன. ஆனால், இப்போது அவர்கள் இருவரும் பெரிதாக நடிப்பதே இல்லை.
கை, கால்களை மட்டுமே படத்தில் அசைக்கின்றனர். ஆனால், இதற்கே ரூ. 300 முதல் ரூ. 400 கோடி பிஸ்னஸ் செய்யப்படுகிறது. அவர்களது படங்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் செல்கின்றனர். ஆனால், படத்தில் அதற்கு ஏற்ற வகையில் ஒன்றுமே இல்லை" என இயக்குநர் வி. சேகர் தெரிவித்துள்ளார்.