Advertisment

தம்பி பிரேம்ஜியின் திருமணத்தை உறுதி செய்த வெங்கட் பிரபு; விரைவில் கல்யாண போட்டோஸ் ஷேர் செய்வேன்!

இயக்குனர் வெங்கட் பிரபு, தனது சகோதரர் பிரேம்ஜி அமரன் திருமணம் செய்து கொள்ள இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
premji

பிரேம்ஜி இன்ஸ்டாகிராம் பதிவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, தனது சகோதரர் பிரேம்ஜி அமரன், இந்து என்கிற பெண்ணை ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக உறுதி செய்துள்ளார். திருத்தணி முருகன் கோவிலில் திருமண விழா நடைபெறும் என்றும் இந்த நேரத்தில் தம்பதிகளின் தனியுரிமைக்கான விருப்பத்தை வெங்கட் பிரபு வலியுறுத்தினார். மேலும், திருமண நிகழ்வின் புகைப்படங்கள் பின்னர் பகிரப்படும் என்று ரசிகர்களுக்கு உறுதியளித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Venkat Prabhu confirms brother Premgi’s wedding: ‘Will soon share pictures from wedding’

பிரேம்ஜியின் திருமணம் குறித்த ஊகங்கள் கசிந்த திருமண அழைப்பிதழால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் பேசப்பட்டது. பல்வேறு வதந்திகளுக்குப் மாறாக மணப்பெண் ஊடகத்துறையைச் சேர்ந்தவர் அல்ல என்று சமூக வலைதளங்களில் வெங்கட்பிரபு தெளிவுபடுத்தினார்.

வெங்கட் பிரபு தனது அறிவிப்பில், திருமணத்தைச் சுற்றியுள்ள ஆர்வத்தை ஒப்புக்கொண்டார், ஆனால், பொதுமக்களும் ஊடகங்களும் தம்பதியரின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் காட்டிய ஆதரவு மற்றும் ஆர்வத்திற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். ஆனால், இந்த முக்கியமான நிகழ்வை, அவருடைய  குடும்பம் அமைதியாக கொண்டாட அனுமதிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.


வெங்கட் பிரபு தனது வழக்கமான நகைச்சுவை உணர்வுடன் எழுதினார், “பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் குடும்பத்தில் ஒரு சுபநிகழ்ச்சி நடைபெற உள்ளது. ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?’, ‘சொப்பனசுந்தரி தற்போது யாருடன் வாழ்கிறார்?’ போன்ற கேள்விகளைப் போலவே, ‘பிரேம்ஜிக்கு எப்போது திருமணம்’ என்பதுதான் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி. உங்கள் கேள்விக்கு பதிலளிக்க, பிரேம்ஜி தனது வாழ்க்கையின் அன்பை, எங்கள் தாயின் ஆசியுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வார்.” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இது எங்கள் (மறைந்த) தாயின் மிகவும் நேசத்துக்குரிய ஆசை, நாங்கள் இந்த திருமணத்தை அமைதியாக நடத்த விரும்புகிறோம். இது தெரியாமல், ஒரு நண்பர் அழைப்பிதழை பகிரங்கமாக பகிர்ந்து கொண்டார். இந்த அழைப்பிதழ் எப்படி வைரலானது என்பதைப் போலவே, மணமகள் ஊடகங்களில் வேலை செய்வதாக் பரவலாகப் பகிரப்பட்டது. சில புகைப்படங்களும் பரப்பப்படுகின்றன. இருப்பினும், மணமகள் ஊடகங்களில் வேலை செய்யவில்லை. திருமணம் முடிந்ததும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் அனைவரும் எங்கள் தனியுரிமையை மதித்து மணமக்களை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் திருமண வரவேற்பில் சந்திப்போம்” என்றார்.

தமிழ்த் திரையுலகில் நன்கு அறியப்பட்ட நடிகரான பிரேம்ஜி அமரன் தனது நகைச்சுவை வேடங்கள் மற்றும் இசைத் திறமைக்காக கொண்டாடப்படுபவர். மங்காத்தா உட்பட வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவர் ஒரு பிரபலமான பாடகர் மற்றும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Venkat Prabhu Premji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment