Advertisment
Presenting Partner
Desktop GIF

விஜய் அரசியலுக்கு வருவதற்குதான் வேலை செய்கிறார்... அதற்குமுன் களதில் இறங்க சொன்ன வெற்றிமாறன்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்காகத்தான் எல்லா வேலைகளும் செய்து வருகிறார் என்றும் அதற்கு முன் விஜய் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்று இயக்குனர் வெற்றிமாறன் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

author-image
WebDesk
New Update
Vetrimaaran Vijay

விஜய் அரசியலுக்கு வருவதற்குதான் வேலை செய்கிறார்... அதற்குமுன் களதில் இறங்க சொன்ன வெற்றிமாறன்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்காகத்தான் எல்லா வேலைகளும் செய்து வருகிறார் என்றும் அதற்கு முன் விஜய் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்று இயக்குனர் வெற்றிமாறன் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

Advertisment

சினிமா நடிகராக மக்களின் மனதில் இடம்பிடித்த எம்.ஜி.ஆர். அரசியல் கட்சித் தொடங்கி அவர் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அவருக்குப் பிறகு, திரைப்பட நடிகையாக மக்களின் மனதில் இடம்பிடித்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். எம்.ஜி.ஆர். தொடங்கி, ஜெயலலிதா வழிநடத்திய அ.தி.மு.க அவர்களுக்குப் பிறகும், அக்கட்சி தமிழ்நாட்டில் இன்றும் பெரிய எதிர்க் கட்சியாக செயல்பட்டுவருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்களும் அவர்களுடைய புகைப்படங்களும் அ.தி.மு.க-வின் ஆதார சக்தியாக உள்ளது.

இந்த இரண்டு திரைத் துறையைச் சேர்ந்த நடிகர்களின் அரசியல் வெற்றிகள், திரைத் துறைக்கு வரும் எல்லோருக்குமே அரசியல் மீதான ஆசை ஒரு துளி தேன் போல மனதுக்குள் இனித்துக்கொண்டு இருக்கிறது. 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு, பல சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்று விரும்பினார்கள், ஆனால், அப்படி யாராலும் வெற்றி பெற முடியவில்லை. இதற்கு காரணம், எம்.ஜி.ஆர் நடிகராக இருக்கும்போதே, அண்ணா தலைமையிலான தி.மு.க-வில் பிரபலமானவராக இருந்தார். இளைஞர்களை ஈர்ப்பவராக இருந்தார். கட்சி கட்டமைப்பு பற்றி தெரிந்திருந்தது. எம்.ஜி.ஆர் தொடங்கி கட்டமைத்து வைத்திருந்த அ.தி.மு.க-வை ஒருங்கிணைத்து பலப்படுத்தி தொடர்ந்தார் ஜெயலலிதா. இதற்கு காரணம் ஒரு கட்சி கட்டமைப்பு ஏற்கெனவே இருந்தது ஒரு காரணம். அதனால்தான், அவர்களுக்குப் பிறகு, அரசியலுக்கு வந்த திரைத்துறையினர் பலரும் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனது. 

அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்று நடிகர்களுக்குள் மட்டுமல்ல ரசிகர்களும் தங்கள் அபிமான நட்சத்திர நடிகர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து, உடல்நிலை காரணமாகப் பின்வாங்கினார். கமல்ஹாசன் கட்சித் தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால், வெற்றி கிட்டவில்லை. அஜித் தான் எந்த காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்துவிட்டார். ஆனால், விஜய் அரசியலுக்கு வருவது பற்றி அவருடைய படங்களிலும் செயல்பாட்டிலும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது.

விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றம் என்று இருந்ததை, விஜய் மக்கள் இயக்கமாக அறிவித்தார். அவ்வப்போது விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். விஜய் தான் அரசியலுக்கு வருவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தில் தகவல் தொழில் நுட்ப அணி, மகளிரணி என பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக தொழிற்சங்கமும் உருவாக உள்ளது. ஒரு அரசியல் கட்சிக்கான கட்டமைப்புடன் விஜய் மக்கள் இயக்கம் பலப்படுத்திக்கொண்டு வருகிறது.

இந்த பின்னணியில்தான், நடிகர் விஜய் சமீபகாலமாக அவருடைய பேச்சு அவருடைய அரசியல் திட்டத்தை முன்னறிவிப்பதாக உள்ளன. 

அண்மையில் வெளியான விஜய்யின் லியோ திரைப்படம், தொடர்ந்து பாக்ஸ் ஆஃபீஸில் வசூலைக் குவித்து வருகிறது. லியோ வெற்றி விழாவிலும்கூட விஜய்யின் பேச்சு அவருடைய அரசியல் வருகையை பூடகமாகக் கூறினார். 

இந்த நிலையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்காகத்தான் எல்லா வேலைகளும் செய்து வருகிறார் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் வெற்றிமாறன், “விஜய் தரப்பில் அரசியலுக்கு வருவதற்கான பணிகளில்தான் ஈடுபடுகிறார்கள் என நினைக்கிறேன். விஜய் மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான உரிமைகள் உள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். அதற்கு முன்பாக களத்தில் பணியாற்ற வேண்டும். அதன்பிறகு அரசியலுக்கு வந்தால் நல்லது” என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய வெற்றிமாறன், “அரசியல் என்பது அனைவருக்குமே சவாலானதுதான். அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களே அரசியலுக்கு வர விரும்புகிறார்கள். ஆகவே, எல்லோருக்கும் அதற்கான உரிமை உள்ளது” என்று கூறினார். 

மேலும், தமிழ்நாட்டில் அரசியலிலும் சமூகத்திலும் சினிமா முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறிய வெற்றிமாறன், சமீபகாலமாக நல்லவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சமூகத்தில் நல்லவிதமான உரையாடல்களை சினிமா ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான பிறகு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்துள்ளது என்றும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vetrimaaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment