நடிகர் கருணாஸ் மகள் திருமணம்
தமிழ் சினிமாவில் முன்னணி நாமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான இருப்பவர் கருணாஸ், பாலாவின் நந்தா படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, திருடாதிருடி, வசூல் ராஜா, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளி்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திர அம்பானி உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், கருணாஸின் மகன் கென் கருணாஸ் அசுரன் படத்தில் நடித்திருந்தார். இதனிடையே கருணாஸின் மகள் டயானாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு நாயகனுடன் இணையும் வெற்றிமாறன்?
முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் வேலைகளில் இருந்து வருகிறார். சூரி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு கதைக்கள் கூறியுளளதாகவும், இதில் ஒரு கதையை படமாக்க உளளதாகவும் கூறப்படுகிறது.
கையில் கட்டுடன் இயக்குனர் சுதா கொங்கரா
இறுதிச்சுற்று படத்தின் மூலம் இயக்குனராக சுதா கொங்கரா அதனைத் தொடர்ந்து இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யா அபர்னா பாலமுரளி இந்த முன்னணி கேரக்டரல் நடித்தருந்தனர். தற்போது சூரரைப்போது இந்தி படத்தை இயக்கி வரும் சுதா கொங்கரா கையில் கட்டுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைலாகி வருகிறது.
சீரியலில் நடிக்கும் எஸ்.ஏ.சி
பிரபல இயக்குனரும் நடிகர் விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்கத்தில் நான் கடவுள் இல்லை படம் வெளியானது. இதனிடையே படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது விஜய் டிவியில் விரைவில் வரவிருக்கும் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலை பிரபல நடிகை ராதிகா தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மறதி நோயால் அவதிப்படும் நடிகை பானுப்பிரியா
முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை பானுப்பிரியா சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் நிலையில், தற்போது மறதி நோயால் அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளார் நான் கற்றுக்கொண்ட சில விஷயங்களை மறந்துவிட்டேன். பின்னர் நடனத்தில் ஆர்வம் குறைந்தது. வீட்டில் பயிற்சி செய்வதை விட்டேன். இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் டைலாக் மறந்துவிட்டது. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பல விஷயங்களை மறந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil