Advertisment
Presenting Partner
Desktop GIF

தீராத மனவேதனையில் விக்னேஷ் சிவன்... காரணம் கேட்டால் உங்களுக்கும் கண்ணீர் வரும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vignesh shivan, விக்னேஷ் சிவன்

vignesh shivan, விக்னேஷ் சிவன்

சமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் பல திரையுலகினர்களில் ஒரு இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் இப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மன வேதனையை தெரிவித்துள்ளார்.

Advertisment

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ராஜலட்சுமி உயர் சாதியை சேர்ந்த வாலிபரின் ஆசைக்கு இணங்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ராஜலட்சுமியை அவரின் தாய் கண் முன்பே தலையை துண்டித்து கொடுரமாக கொலை செய்தார்.

ராஜலட்சுமி கொலை விவகாரத்தில் விக்னேஷ் சிவன் கண்டன கருத்து

இந்நிலையில் ராஜலட்சுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இணையதளத்திலும், சமூக வலைதளத்திலும் ராஜலட்சுமியின் கொலை குறித்து ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திரையுலக பிரபலங்கள் சிலர் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மனவேதையுடன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இது போன்ற அரக்கன்கள் இருக்கும் இடத்தில் தான் நாம் வசிக்கிறோம். தினமும் எங்காவது இது போன்று நடக்கிறது. நம்மால் ட்வீட் செய்து, இரங்கல் தெரிவித்து, கவலைப்பட மட்டுமே முடிகிறது. என்ன பண்றதுன்னே தெரியல, பார்க்க பார்க்க வலிக்குது” என்று தெரிவித்துள்ளார்.

October 2018

இவர் மட்டுமின்றி, சிறுமியின் கொலையை கண்டித்து இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், நடிகர் சித்தார்த் உட்பட பலரும் கடுமையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Vignesh Shivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment