/indian-express-tamil/media/media_files/2025/09/11/arya-2025-09-11-14-20-58.jpg)
விஷுவல் எஃபெக்ட் இல்ல, இது ரியல் சன்செட்; ஆர்யா நடித்த படத்தில் இப்படி ஒரு ஹிஸ்ட்ரி சீன் தெரியுமா?
தமிழ் சினிமாவின் ஷாமிங் நடிகராக வலம் வரும் ஆர்யா, கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ’அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘பட்டியல்’, ‘நான் கடவுள்’, ‘மதராசபட்டினம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன், ‘அவன் இவன்’, ‘வேட்டை’, ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
இதில் ‘நான் கடவுள்’, ‘மதராசபட்டினம்’ போன்ற படங்கள் ஆர்யாவிற்கு திருப்பு முனையாக அமைந்தது. நடிகர் ஆர்யா நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் தொடக்கத்தில் மலையாள திரைப்படங்களை மட்டுமே தயாரித்து வந்தார். பின்னர் சந்தானம் நடிப்பில் வெளியான ’டிடி நெக்ஸ்ட் லெவல்’ பதத்தை தயாரித்து வெளியிட்டார்.
ஆனால், இந்த படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பொதுவாக ஆர்யா -சந்தானம் காம்பினேஷன் ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும். இவர்கள் இணைந்து நடித்த ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, ‘ராஜா ராணி’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ஆர்யாவும் சந்தானமும் இணைந்து நடிக்கமாட்டார்களா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடுவதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி ஒன்று வெளியானது. இதில் பல பெண்கள் கலந்து கொண்டு ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை அபர்ணதியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியால் ஆர்யா பெரும் சர்ச்சையில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பலர் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
பின்னர் நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நடிகர் ஆர்யா தற்போது படங்கள் தயாரிப்பது, நடிப்பது என பிசியாக இருக்கிறது.
இந்நிலையில், ஆர்யா நடிப்பில் வெளியான ‘சர்வம்’ படத்தின் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, திரிஷா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் ‘சர்வம்’. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் அடித்தது.
அதிலும், ‘அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்’ பாடல் காதலர்களின் ஃபேவைரட் லிட்டில் இன்றும் இடம் பெற்றுள்ளது. அந்த பாடலில் சூர்யன் மறையும் போது திரிஷா - ஆர்யா நடனமாடுவது போன்ற காட்சி இருக்கும். இதை பலரும் சிஜி என்று கூறினர். ஆனால், அது உண்மையான காட்சிதான் என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், “அந்த காட்சியை என்னை திரும்ப எடுக்க சொன்னாலும் என்னால் எடுக்க முடியாது. அதை பலரும் விஷுவல் எபெக்ட் என்று கூறினார்கள். ஆனால் அது உண்மையான சன்செட்.The Rann of Kutch என்ற இடத்தில் எடுத்த காட்சி அது. அதில் என்ன தவறு இருந்தாலும் அதை பயன்படுத்திதான் ஆக வேண்டும்” என்றார்.
Wow 👌💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 11, 2025
pic.twitter.com/hRdl6Ffewk
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.