பிரபல இயக்குநர் வி. சேகர், ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தனது திரையுலக வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். தனது குருநாதரும், மூத்த இயக்குநருமான பாக்யராஜ் ஒரு படத்தின் கதையைக் கேட்டபோது, அதில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் குறைவு என்பதால் நடிக்க மறுத்துவிட்டார். பாக்யராஜின் ஆலோசனையை மீறி, சேகர் அந்தப் படத்தை நடிகர் சிவகுமாரை வைத்து எடுக்க முடிவு செய்தார்.
இது குறித்து சேகர் கூறுகையில், இயக்குனர் பாக்யராஜ், என்னோட உதவியாளர்கள் எல்லாம் அவரவர் ஹீரோவாக படம் பண்றாங்க. என்னை வைத்து யாரும் படம் எடுக்கவில்லை. நீ என்னை ஹீரோவா போட்டு படம் என்று சொன்னார். நான் அவரிடம் இந்த கதையை சொன்னேன். கதை நல்லா இருக்கு. ஆனால் க்ளைமேக்ஸை எனக்கு தகுந்தார்போல் கொஞ்சம் மாற்று என்று சொன்னார். ஆனால் க்ளைமேக்ஸை மாற்றினால் கதை கெட்டுவிடும் என்று நான் மறுத்துவிட்டேன்.
அதன்பிறகு நடிகர் சிவக்குமாரிடம் கதை சொன்னேன். அவர் நான் ஹீரோவாக நடிச்சி 10 வருஷம் ஆச்சுபா என்னை ஹீரோவா ஏத்துக்குவாங்களா என்று கேட்க, அதை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க வாங்க என்று சொன்னேன். அதன்பிறகு கதையில் சிவக்குமாருக்காக, அவர் நீண்டகாலமாக கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இறுதியில் கல்யாணம் செய்துகொண்டதாக மாற்றினேன்.
இதை பாக்யராஜூவிடம் சொன்னபோது இது சரியாக வருமா என்று அவருக்கும் சந்தேகம். ஆனால் நான் உறுதியாக இருந்து படத்தை எடுத்து முடித்துவிட்டேன். படம் ரிலீஸ் ஆனவுடன் படத்தை பார்த்த பாக்யராஜ் நான் திரைக்கதை தான் ஆனால் நீ கதாசிரியர் என்று நிருப்பிச்சிட்யா என்று சொன்னார். அந்த படம் தான் பொறந்தவீடா புகுந்த வீடா.
"பாக்யராஜ் சார் கேட்டது நியாயம்தான். அவருக்கு உச்சக்கட்ட இமேஜ் இருப்பதால், ஒரு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க அவர் தயங்கினார். ஆனால், நான் அதை ஹீரோயின் கதை என்று கூறியபோது, அவரும் எனது முடிவை ஏற்றுக்கொண்டார்" என்றார். அதன்பின் வி. சேகர், நடிகர் சிவகுமாரை அணுகி, கதையைச் சொன்னபோது, சிவகுமார் எந்தவிதமான ஈகோவும் இல்லாமல், "உங்களுக்கு எந்தக் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அதற்குக் கொடுங்கள். நான் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்" என்று பெருந்தன்மையுடன் பதிலளித்தார்.