கார்த்தி, காஜல் ஓகே... அந்த 4 கொடூர வில்லன்ஸ் எப்படி வந்தாங்க? நான் மகான் அல்ல சீக்ரெட் சொன்ன இயக்குநர்!

இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்தார். அவரது ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும், சூரி, அருள்தாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜெயபிரகாஷ் போன்ற பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்தார். அவரது ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும், சூரி, அருள்தாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜெயபிரகாஷ் போன்ற பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-09-09 144106

2009-ம் ஆண்டு ‘வென்னிலா கபடிக்குழு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது இயக்குநர் பயணத்தை தொடங்கியவர் சுசீந்திரன். ஒரு சாதாரண கிராமத்து கபடிக்குழுவின் வெற்றி பயணத்தை உணர்வுகளோடும், உற்சாகத்தோடும் சொல்லிய அந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, தன்னுடைய இரண்டாவது படமாக 2010-ம் ஆண்டு ‘நான் மகான் அல்ல’ என்ற வித்தியாசமான மற்றும் தீவிரமான த்ரில்லர் படத்தை இயக்கினார்.

Advertisment

இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்தார். அவரது ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும், சூரி, அருள்தாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜெயபிரகாஷ் போன்ற பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து, கதைக்கு வலிமை சேர்த்தனர். ‘நான் மகான் அல்ல’ ஒரு எளிய கதை எனத் தோன்றலாம். ஆனால், அதில் நடக்கும் உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள் அனைத்தும் படம் முழுக்க ரசிகர்களை கட்டிப்போட்டன.

கார்த்தி ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, நேர்மையான இளைஞன். அவரது வாழ்க்கையில் ஏதோ விதமான அமைதியும், நிம்மதியும் இருந்தபோதிலும், சில போதைக்கேட்ட கல்லூரி மாணவர்கள் அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகின்றனர்.

அந்த மாணவர்கள், ஒரு பெண்ணைக் கொலை செய்து, அந்த கொலையை சாட்சியம் பார்த்தவர்களை ஒருவருக்கொருவர் முற்றிலும் அழிக்க திட்டமிடுகிறார்கள். அந்தச் சூழலில், கார்த்தியின் தந்தை (ஜெயபிரகாஷ்) அவர்களால் கொல்லப்படுகிறார். இதன் பின், தன் தந்தையின் மரணத்திற்கு நீதி கோரும் கார்த்தி, அவர்கள் அனைவரையும் துரத்தி, ஒரு சாதாரண மனிதனாக இருந்தவர் எப்படி ஆவேசமாகவும், வீரமாகவும் மாறுகிறார் என்பதை, மிக இயல்பாகவும், நம்பச் செய்வதற்கேற்ற வகையிலும் படம் சொல்லுகிறது.

Advertisment
Advertisements

ஒரு பெட்டியில் அந்த நான்கு மாணவர்களாக நடித்தவர்களை பற்றி பேசியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன் அவர்கள். அவர் பேசுகையில், "அதில் வினோத் என்று ஒருவர் நடித்திருந்தார், அவர் 'நந்தா' படத்தில் சிறுவராக ஏற்கனவே நடித்திருந்தனர் தான். மெட்ரோ கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜய் மில்டன் சாருடைய அசிஸ்டன்ட், அந்த பையனை எனக்கு முன்னாடியே தெரியும். அவர் பெயர் மஹேந்திரன். மற்றொரு பய்யனை நாங்கள் வழபழனி சிக்கனலில் பார்த்தோம். அப்படி தேர்ந்தெடுத்தவர்கள் தான் அவர்கள் நான்கு பேரும்." என்று பகிர்ந்துள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: