வெறும் 500 ரூபாயுடன் மும்பைக்கு வந்தேன்: தோனி பட ஹீரோயினின் சோக கதை

தனியாக வீடு எடுத்து தங்குவதற்கு பணம் இல்லாததால், ஆரம்ப காலங்களில் விளம்பரங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடினேன்.

எம்.எஸ்.தோனி, படத்தில் தோனியின் முன்னாள் காதலியாக நடித்து,  இந்தி மட்டும் அல்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இடம் பிடித்த  நடிகை திஷா பதானி தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனி அவர்களின் பயோக்ராஃபி ’எம்.எஸ் தோனி’ என்ற பெயரில்  தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்றது. இதில், தோனி அவர்களின்  முன்னாள் காதலி கதாப்பாத்திரத்தில் திஷா பதானி நடித்திருந்தார்.

அவரின் சின்ன சின்ன கண் அசைவுகள் ரசிகர்களை அவரின் பக்கம் ஈர்த்தது.  அந்த சமயத்தில் தான்,  இயக்குனர் சுந்தர்.சி  அவரை நேரடியான தமிழ் படத்திற்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டார். அதன்படி, அவரது இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட படைப்பான, ‘சங்கமித்ரா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

.இந்த கதாபாத்திரத்தில்தான் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் ஒப்பந்தமாக இருப்பதாக முன்பு தகவல் வந்தது. இந்நிலையில்,   திஷா பதானி  தனது காதலருடன் இணைந்து நடித்துள்ள பாகி 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்த வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும், திஷா தனது கடந்த கால வாழ்க்கை குறித்து, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், “  சினிமா கனவில் நான்  எனது படிப்பை பாதியிலியே விட்டு வெளியேறினேன்.  வெறும் 500 ரூபாய் பணத்துடன் சொந்த ஊரை விட்டு மும்பைக்கு வந்த நான்,  பல நாட்கள் சேன்ஸ் தேடி அலைந்துள்ளேன். தனியாக வீடு எடுத்து தங்குவதற்கு பணம் இல்லாததால், ஆரம்ப காலங்களில்  விளம்பரங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடினேன்.

முதன்முறையாக, ஒரு படத்திற்கு என்னை கதாநாயகி  என்று ஒப்பந்தம் செய்தது, என் படங்கள் ஓடுமா? ஓடாதா? என்று பல நாட்கள்  நினைத்தது உண்டு. ஆனால், இரண்டு படங்களிலேயே என்னை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதை என்னால் நம்ப முடியவில்லை.  இப்போது நான் அடைந்திருக்கும் புகழை ஒருநாளும் மறக்க மாட்டேன். ஒரு காலத்தில் வேலைக்கு செல்வது, விளம்பரங்களில் நடிப்பது, சிறிது நேரம் தூங்குவது மீண்டும் வேலைக்கு செல்வது என இப்படி தான் என் வாழ்க்கை இருந்தது” என்று கூறியுள்ளார்.

 

×Close
×Close