New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/Disha-Patani-Work-Out.jpg)
திஷா பதானி
Disha Patani Video: பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 1.40 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
திஷா பதானி
Disha Patani Workout Video: பாலிவுட்டின் ஸ்டன்னர் திஷா பதானி உடற்பயிற்சியில் ஆர்வம் மிகுந்தவர். ஒருமுறை அல்ல, இரண்டு முறை அல்ல, தவறாமல் திஷா, தனது சோஷியல் மீடியாவில் அவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் வாயடைத்து போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.
தனது சொந்த யூ டியூப் சேனலைத் தொடங்கிய திஷா, தனது உடற்பயிற்சியின் வழக்கமான வீடியோவைப் பகிர்ந்து கொள்கிறார். ஷூட்டிங்கிற்கு இடையில் இதனை தவறாமல் செய்வது பெரிய விஷயம் என்றே தோன்றுகிறது நமக்கு. திஷா சமீபத்தில் பதிவேற்றிய வீடியோ, பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 1.40 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
அந்த வீடியோவில் தனது ஆப்ஸைக் காட்டுகிறார் திஷா பதானி. கடின முயற்சி, அர்ப்பணிப்பு, சரியான உணவு முறை உள்ளிட்டவைகள் இருந்தால் தான் இப்படியான உடலமைப்பைப் பெற முடியும்.
இதற்கிடையே ஆதித்யா ராய் கபூருடன் இணைந்து 'மலாங்' என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் திஷா. மோஹித் சூரி இயக்கும் இப்படம் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகிறது. தவிர, அனில் கபூர் மற்றும் குணால் கெம்மு ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இதனை பூஷன் குமார், கிருஷன் குமார், லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் ஆகியோர் தயாரிக்கின்றனர். வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் 2020-ம் ஆண்டில் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.