பல அன்பான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலரை இயற்கையாகவும், தற்கொலை மூலமாகவும் இந்த கோவிட் 19 காலத்தில் இழந்து விட்டோம். இதனால் இந்த 2020-ம் ஆண்டு இந்திய திரையுலகிற்கு ஒரு கவலையான ஆண்டாக உள்ளது. இந்நிலையில் இளம் நடிகை திவ்யா செள்க்சே புற்றுநோயை எதிர்த்து, காலமானார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
,
2016 ஆம் ஆண்டில் 'ஹை அப்னா தில் தோ அவாரா' மூலம் அறிமுகமான திவ்யா, சில படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். அதோடு நல்ல பாடகியாகவும் இருந்தார். கடந்த சில மாதங்களாக அவரை திரையுலகில் காணவில்லை. ரசிகர்களும், நண்பர்களும் அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் தவித்தனர். ஆனால் அவர் ஒரு கொடிய நோயுடன் போராடுகிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது.
இதற்கிடையே திவ்யாவின் நண்பர்களும், கோ-ஸ்டார்களுமான நியாதி ஜோஷி மற்றும் சாஹில் ஆனந்த் அவருடன் உள்ள படங்களை வெளியிட்டு சமூக ஊடகங்களில் தங்கள் அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
,
இந்நிலையில், ஜூலை 11-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "நான் தெரிவிக்க விரும்புவதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நேரம் குறைவாக இருக்கிறது. இப்போது உங்களுக்கு சொல்லும் நேரம் வந்துவிட்டது. நான் என் மரண படுக்கையில் இருக்கிறேன். ஆனாலும் நான் பலமாக இருக்கிறேன். துன்பமில்லாத இன்னொரு வாழ்க்கை இருக்கட்டும். கேள்விகள் எதுவும் வேண்டாம். நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
புற்றுநோயுடன் போராடி வந்த திவ்யாவின் மறைவு அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”