நடிகை திவ்யா உன்னி வளைகாப்பு – கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படம்

மலையாள நடிகையும் நடனக் கலைஞருமான திவ்யா உன்னி தனது மூன்றாவது குழந்தையை கர்ப்பத்தில் சுமந்துள்ள நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் தனது கனவருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

By: Updated: December 28, 2019, 07:59:45 PM

மலையாள நடிகையும் நடனக் கலைஞருமான திவ்யா உன்னி தனது மூன்றாவது குழந்தையை கர்ப்பத்தில் சுமந்துள்ள நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் தனது கனவருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

பிரபல நடிகை திவ்யா உன்னி மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர். நடிகை திவ்யா உன்னி பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் ஆகிய செவ்வியல் நடனங்களை கற்ற நடனக்கலைஞர். இவர் நடனத்துக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

திவ்யா உன்னி 2002 ஆம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2016-இல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

தனியாக இருந்த நடிகை திவ்யா உன்னி, அருண் குமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவுக்கேச் சென்றுவிட்டார். திவ்யா உன்னி அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் ஶ்ரீபாதம் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். இந்த பள்ளியில், திவ்யா உன்னி, பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் ஆகிய செவ்வியல் நடனங்களை கற்பிக்கிறார்.


இந்த நிலையில், நடிகை திவ்யா உன்னி கர்ப்பமடைந்தார். அவருக்கு வளைகாப்பு விழா நடந்தது. அதோடு, தனது கணவருடன் சேர்ந்து ஹூஸ்டன் நகரில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். விரைவில் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்க உள்ள திவ்யா உன்னி, தனது மகிழ்ச்சியான கொண்டாட்டத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், உலகின் மிகவும் அழகான விஷயங்களைப் பார்க்க முடியாது, ஏன் தொடக் கூட முடியாது. அது இதயத்தால் மனப்பூர்வமாக உணரப்பட வேண்டும் என்கிற கெலன் கெல்லரின் வாசகத்தை பதிவிட்டுள்ளார். அவருடைய புகைப்படம் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Divya unni celebrates her third baby shower christmas with husband photos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X