scorecardresearch

பட ப்ரமோஷன் டான்ஸ்: மேடையில் விஜய் டிவி டி.டி மீது கோபமான ரன்பீர் சிங்

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என பயணித்து வரும் டி.டி தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பாலிவுட் நட்சத்திரம ரன்பீர் கபூர் நடித்துள்ள ஷம்ஷேரா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளி திவ்யதர்ஷினியின் ப்ரமோஷன் பிடிக்காமல் ரன்பீர் கபூர் கோபப்பட்ட வீடியோ பதிவு வைரலாகி வருகிறது

பாலிவுட் சினிமாவில்முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ரன்பீர் கபூர். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் தற்போது ஷம்ஷேரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் ரன்பீர் கபூர் பிஸியாக இருந்து வருகிறார்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்காக தமிழ் சின்னத்திரையில் 23 வருடங்களாக தொகுப்பாளினி பணியை சிறப்பாக செய்து வரும் திவ்யதர்ஷினி ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என பயணித்து வரும் டி.டி தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் காபி வித் காதல் துருவநட்சத்திரம், ஜோஷ்வா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே ரன்பீர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், அவருடன் எடுத்தக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில பதிவிட்டிருந்தார். அதேபோல் குக் வித் கோமாளி சிவாங்கியும் இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், ப்ரமோஷன் நிகழ்ச்சியில், ரன்பீர் ஆக்ஷன் காட்சிக்காக ரெடியான போது டி.டி அணிந்திருந்த காஷ்பூமை பார்த்து என்ன இது என்று கேட்க, இது டான்ஸ் காட்சி என்று சொன்னதாக டி.டி சொல்கிறார். ஒரு நிமிஷத்தில் ரெடியாகிவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அதுக்கு முன்னாடி ஒரு டான்ஸ் என்று சொல்லி ரன்பீருடன் டான்ஸ் ஆடுகிறார்.

அதன்பிறகு ரன்பீர் ஆக்ஷன் காட்சிக்காக அழைக்க என்னால் முடியாது என்று சொல்லி ஷம்ஷேர் படம் வரும் ஜூலை 22-ந் தேதி வெளியாகும் என்று சொல்கிறார். இதனால் டென்ஷன் ஆன ரன்பீர் கோபத்துடன் டி.டி.யை திட்டி அனுப்புகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது உண்மையா அல்லது படத்தின் ப்ரமோஷருக்கான இப்படி செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Divyadarshini interview ranbir kapoor for shamshera movie promotion

Best of Express