தீபாவளி நெருங்கிடுச்சு! சென்னையில் இருந்து லட்சக் கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு 'ஆன் தி வே'-யில் உள்ளார்கள். ரயிலில் அன் ரிசர்வ் கோச்களில் மூச்சு விடக் கூட இடம் இல்லாமல் பயணித்தாலும், தீபாவளிக்கு சொந்த ஊரில் குடும்பத்துடன் வீட்டில் இருப்போமே என்ற மகிழ்ச்சியில், அந்த கடினமான பயணங்களை தவம் போல் பெரும்பாலானோர் கடந்து வருகின்றனர்.
சரி ஊருக்கு வந்து ஜாலியா வெடி வெடிக்கலாம்-னு பார்த்தா, காலை-ல ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம்-னு சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இணங்க, அரசு வெடி வெடிக்க டைம் அலார்ட் பண்ணிருக்கு.
அதையும், நம்மாளுங்க சிலர், அந்த ரெண்டு மணி நேரத்தை, அஞ்சு அஞ்சு நிமிஷமா பிரிச்சு நாள் முழுசும் வெடிக்கலாமா-னு கேட்டு, நீதிமன்றத்தையே அலற விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சரி... அடுத்த ஆப்ஷன் என்னான்னு யோசிச்சா, மெர்சலுடன் கண் முன்னே வந்து நிற்கிறது சர்கார். வேற என்ன படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுதுன்னு பார்த்தா, அட நம்ம 'பில்லா பாண்டி'.
சர்கார்:
சொல்லவே தேவையில்ல... தளபதியின் மாஸ் ஆக்ஷன் பேக் சர்கார். துப்பாக்கியில் கிளாஸ் விஜய்யை காட்டிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், கத்தியில் கிளாஸ் + மாஸ் விஜய்யை காண்பித்தார். இப்போது, முழுக்க முழுக்க ஆக்ஷன் பேக்குகளை வைத்து சர்கார் அமைத்திருக்கிறார். சீன் பை சீன் ரசிகர்களுக்கு இதில் ட்ரீட் உள்ளது.
கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு என செலக்டிவ் கதாபாத்திரங்கள் படத்தை மேலும் வலுவாக்க அமைக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையில், முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யை பார்க்க ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்.
நாங்களும் தான் பாஸ்.
பில்லா பாண்டி:
ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் அஜித் தான் மெயின் ரோல் என்றால் மிகையாகாது. அஜித்தின் வெறியனாகவே வாழ்ந்திருக்கிறார் ஆர்.கே.
நடிகர்கள் : ஆர்.கே. சுரேஷ், யோகி பாபு, இந்துஜா, தம்பி ராமையா.
இயக்குநர் : சரவணா ஷக்தி
தயாரிப்பாளர் : ஆர்.கே. சுரேஷ்
இசையமைப்பாளர் : இளையவன்
ஒளிப்பதிவு : வீரா குமார்
விஜய்யின் சர்கார் ரிலீசாவதால், அதற்காகவே அஜித் ரசிகர்களின் படையெடுப்பு பில்லா பாண்டிக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தம், இந்த தீபாவளி அஜித் vs விஜய் தீபாவளி தான்.