திமுக தலைவர் கருணாநிதி சினிமாவில் ஆற்றிய் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த சிறப்பு தொகுப்பை கட்டுரையாக்கியுள்ளது ஐஇதமிழ்.
Advertisment
தமிழ்த் திரையுலகில் பல அடுக்கு மொழி வசனங்களாலும், அதிரடியான வார்த்தைகளாலும் பல வெற்றிப் படங்களை தனது கதை வசனத்தில் வெளிக் கொணர்ந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இன்றளவும் இவரின் பராசக்தி வசனங்கள் மக்களிடம் மிகுந்த தாக்கத்தை எற்படுத்துபவை.
சிறுவயது முதலே மொழிப்பற்று அதிகம் கொண்ட கருணாநிதி, கவிதைகள், நாவல்கள் மற்றும் மடல்களை எழுதி, தனது எழுத்துத் திறமையை வளர்த்து வந்தார். அதனை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டுசென்ற அவர், நாடகங்களுக்கும் படங்களுக்கும் திரைக்கதைகளை எழுதினார்.தமிழ் சினிமாவில் எழுத்து மொழியே உரையாடலாக இருந்தது.. பாமர மக்களின், எளியவர்களின் வாழ்க்கை பேசாப் பொருளாக இருந்தது.
எல்லாப் படங்களிலும் சமூக கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், தற்கால சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தியது சிவாஜி கணேஷ் நடிப்பில் வெளியான பராசக்தி படம்தான் என்றால் மிகையாகாது. சினிமாத் துறையில் அவர் செய்யாத காரியங்களே இல்லை என்று கூறலாம். அவர் படங்களுக்கு கதை, திரைக்கதை, பாடல்கள், வசனங்கள் என அனைத்திலும் தனது சீரிய எழுத்துகளால் கர்ஜித்தவர் கருணாநிதி. இப்படி தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, மறுக்க முடியாத வசனங்களை வலம் வர செய்த கலைஞரின் காலத்தால் அழிக்க முடியாத வசனங்களின் சிறப்பு தொகுப்பு.