Advertisment

‘வெறுப்பு அரசியலில் சிக்கித் தவிக்கும் சமூகத்திற்கு மீட்சி கலைகளே’; வானம் கலை விழாவில் கனிமொழி பேச்சு

“வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே” என்று தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Pa Ranjith Kanimozi

சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா - வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி கனிமொழி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா - வேர்க்கோடுகள் விருந்து வழங்கும் விழாவில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி கனிமொழி, “வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் வருகைக்கு பிறகு, ஒரு முக்கியமான ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல. 

இயக்குனர் பா. ரஞ்சித் சினிமா இயக்குவதோடு மட்டுமல்லாமல், ஒத்த சிந்தனை கொண்ட உதவி இயக்குனர்களுக்கு நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் வாய்ப்பு அளித்து படம் தயாரித்து இயக்குனர்களை உருவாக்கி வருகிறார். மார்கழியில் மக்களிசை, வானம் கலை விழா,  சமத்துவத்திற்கான தலித், கலை பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை ஆண்டுதோறும் தலித் வரலாற்று மாதமாக நீலம் பண்பாட்டு மையம் கொண்டாடி வருகிறது. அதன்படி, பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் வானம் கலை விழாவை இந்த ஏப்ரல் மாதம் நடந்து வருகிறது. 

சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி தலித் வரலாற்று மாத கண்காட்சியுடன் வானம் கலை விழா தொடங்கியது. இதையடுத்து, மலையாள சினிமாவின் முதல் கதாநாயகியான தலித் சமூகத்தைச் சேர்ந்த பி.கே ரோஸி திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் ஏப்.8ம் தேதி இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இந்த திரைப்பட விழாவில், முதல் நாள் நிகழ்வில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைப்படங்கள் குறித்து இயக்குநர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில், இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா, நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்து, திரைக்கதையாசிரியர் ஜா.தீபா தொகுத்த 'சமூக சிந்தனை' எனும் தலைப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இயக்குநர் P.S.வினோத்ராஜ், இயக்குநர் கௌதம்ராஜ் ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “திரைத்துறையில் இயக்குநர் பா. இரஞ்சித்தின் வருகைக்குப் பிறகு மிக எளிதாக சமூக சிந்தனை கொண்ட திரைப்படம் எடுப்பதற்கு வழிவகுத்தது” என்று கூறினார். அடுத்து, இயக்குனர் அதியன் ஆதிரை, இயக்குனர் பா. இரஞ்சித், கலை இயக்குனர் இராமலிங்கம், திரைக்கதையாசிரியர், எழுத்தாளர் தமிழ் பிரபா ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. 

 

திரைப்பட விழாவின் கடைசி நாளான ஏப்ரல் 10-ம் தேதி நிகழ்வில் 'மாமன்னன்' படம் திரையிடப்பட்டு இயக்குனர், கலை இயக்குனர், படத்தொகுப்பாளர், சவுண்ட் டிசைனர் அனைவரும் பார்வையாளர்களோடு கலந்துரையாடினர். 

இதைத் தொடர்ந்து 'டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நவ் & தென்' ஆவணப்படம் திரையிடப்பட்டு அப்படத்தின் இயக்குநர், எழுத்தாளர் ஜோதி நிஷா கலந்துரையாடினார். இயக்குநர் ரிந்து தாமஸ் மற்றும் சுஷித் கோஷ் ஆகியோர்கள் இயக்கிய 'ரைட்டிங் வித் ஃபயர்' ஆவணப்படம் திரையிடப்பட்டது. 

இதைத் தொடர்ந்து 'தலித் சினிமா' எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் தொகுப்பாளர் இளம்மருது தொகுத்து வழங்க இயக்குநர்கள் பா. இரஞ்சித், ஜெயகுமார், டாக்டர் பிஜு தாமோதரன் ஆகியோர்கள் கலந்துரையாடினர். இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில்  “சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்கப் பட்டவர்கள் என இரண்டு வகையாக இருப்பதை நாம் உணர வேண்டும். என்னை எதிர்ப்பதற்காக எடுக்கப்படும் படங்கள் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை” என்று விமர்சனம் செய்தார். 

இதையடுத்து,  வானம் கலை விழாவில் ஏப்ரல் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை கலையும் அழகியலும் ஓவிய கண்காட்சி நடைபெறுகிறது.

இதனிடையே, ஏப்ரல் 27 மற்றும் 28-ம் தேதி தலித் வேர்சொல் இலக்கிய கூடுகை போன்ற நிகழ்வுகள் சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற வானம் கலை விழா - வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் தி.மு.க எம்.பி கனிமொழி பங்கேற்றார். அப்போது பேசிய கனிமொழி, “வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே. நாம் கலைகள் வழியாக இங்கு வெறுப்பு சிந்தனைகளுக்கு மாற்றாக அன்பையும் , சமத்துவத்தையும் தொடர்ந்து பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் , தொடர்ந்து பேசுவோம்” என்று கூறினார்.

தி.மு.க எம்.பி கனிமொழி நீலம் பண்பாட்டு மையத்தின் வானம் கலை விழாவில் பங்கேற்றது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இன்று சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா - வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி.

வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே!

ஓவியர் திரு. சந்துரு அவர்களுக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்த வானம் கலை விழா குழுவினருக்கும் எனது அன்பும் வாழ்த்தும்.” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pa Ranjith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment