குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் டைரக்ஷனில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, திவ்ய பாரதி, முனீஷ்காந்த் என பலர் நடித்துள்ள படம் மகாராஜா.
இந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர், படத்தில் லட்சுமியை காணவில்லை எனப் புகார் அளிக்கிறார். போலீசார் யார் அந்த லட்சுமி மகளா? மனைவி என விசாரிக்கும் தொடங்குகின்றனர். இதில்தான் படத்தின் கதை நீள்கிறது.
படத்தில் அஜனீஷ் லோக்நாத்தின் இசை பேசப்படுகிறது. இந்தப் படம் தமிழ்நாட்டில் 450 திரையரங்குகளிலும், ஆந்திராவில் 300 திரையரங்குகளிலும், கேரளா மற்றும் கர்நாடகாவில் 165, 150 திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில் படத்துக்கு போட்டியாக மற்ற படங்கள் வெளிவராத நிலையில் மகாராஜாவின் வசூல் ஏறுமுகமாக உள்ளத. அதாவது முதல் நாள் வசூல் ரூ.7.5 கோடியாக இருந்த நிலையில், இரண்டாம் நாள் வசூல் ரூ.11.95 கோடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, மூன்றாம் நாளில் தமிழ்நாட்டில் ரூ.7 கோடி என உலக அளவில் ரூ.9 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல் தொடர்ந்தால் படம் விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் திரைக்கு வந்த அரண்மனை 4, சூரியின் கருடன் உள்ளிட்ட படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“