மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரே ஒரு மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சரித்திர நாவலை தழுவி, அதே நேரத்தில் மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. 1953ஆம் ஆண்டு காலத்தில் மலையாளத்தில் வெளியான படம் ஜெனோவா. இந்தப் படத்தில் மக்கள் திலகம் சிப்ரஸோ என்ற பெயரை தாங்கி நடித்திருந்தார்.
படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக பி.எஸ் வீரப்பாவும், மலையாளத்தில் ஆலப்பி வின்சென்டும் நடித்திருந்தனர். மேலும், இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணயும் அன்னாஸ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/UdgWSqp58LLBcKJ3svbC.jpg)
படத்தின் நாயகியாக பி.எஸ் சரோஜா நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு எம்.எஸ் விஸ்வநாதன், ஞான மணி, டி.ஏ கல்யாணம் என 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றினார்கள்.
எம்.ஜி.ஆர் நடித்த ஒரே மலையாள படம் இதுதான். இந்தப் படம் மலையாளத்தில் முதலில் வெளியானது. அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து தமிழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“