பள்ளி குழு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்தப் படத்தில் தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் ஒருவர் காணப்படுகிறார். இவர், இன்றைய தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களில் முதன்மையானவராக உள்ளார்.
இவரை பற்றி எழுத அறிமுகம் தேவை இல்லை. அந்த அளவுக்கு இவர் பிரபலம். எனினும், புகைப்படத்தில் சம்பந்தப்பட்ட நடிகரை அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை.
சக மாணவர்களுடன் அந்த நட்சத்திரம், சாந்தமாக காணப்படுகிறார். இன்றளவும் அந்த நட்சத்திரம் அப்படிதான் காணப்படுவார். அவர் வேறு யாரும் இல்லை. தமிழ் திரையுலகின் தளபதி விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு டைரக்ஷனில் கோட் என்ற படத்தில் நடித்துவருகிறார்.
இந்தப் படத்துக்கு பின்னர் நடிகர் விஜய் முழு நேர அரசியல் மக்கள் தொண்டு பணிகளில் ஈடுபட உள்ளார். இவர் ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றிவிட்டார். அந்த அரசியல் இயக்கத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“