கல்யாணம் என்று சொன்னாலே போதும், பெண்களுக்குள் ஆனந்தம், பதற்றம், பெற்றோர்களைப் பிரியும் சோகம் என்று மிக்ஸ்டு எமோஷன்ஸ் வர ஆரம்பித்துவிடும். அதிலும் கல்யாணம் என்று சொன்ன உடனே கனவு உலகத்தில் உலா வரத் தொடங்கி விடுவார்கள். கல்யாணத்தில் அலங்காரங்கள் எப்படி இருக்க வேண்டும், சாப்பாட்டின் மெனு என்னென்ன, எந்த நிகழ்வுக்கு எந்த நிற ஆடை என்று டீப்பாக பிளானிங்கில் இறங்கி விடுவோம். குறிப்பாக நமது நண்பர்கள் வருகிறார்கள் என்றால் பட்ஜெட் கல்யாணம் கூடத் திருவிழா போலத் தோன்றும்.
சோனம் கபூர் கல்யாணம் கூட அப்படித்தான். ஆனால் இதில் ஒரு சின்ன மாற்றம். சோனம் கபூருக்கு நடந்தது பட்ஜெட் கல்யாணம் இல்லை, உண்மையிலேயே திருவிழா கோலம் கொண்ட கல்யாணம் தான். எல்லாவற்றிலும் சிறப்பான ஏற்பாடுகள் நடந்தாலும் முதல் சோதனையாக மைந்தது நடிகை ஸ்ரீதேவியின் மரணம். திருமணத்திற்குச் சிறிது நாட்களே இருந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவி இறந்து போனதால், சோனம் கபூரின் திருமணம் முதல் முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
அதில் ஒரு நியாயம் இருந்தது சரி. சோனம்-க்கு இறந்த ஸ்ரீதேவி பெரியம்மா என்பதாலேயே திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. ஒரு வழியாக எல்லாச் சடங்குகளும் முடிந்து சோனம் - ஆனந்த் கல்யாணத்திற்கு மார்ச் 12ம் தேதியைக் குறித்து கொடுத்தார் ஜோசியர்.
ஆனால் ஜோசியர் குறித்து கொடுத்த தேதியில் தான் வந்தது ஒரு டுவிஸ்ட். சோனமுக்கு நெருங்கிய தோழி நடிகை ஸ்வரா பாஸ்கர். எந்தத் தேதியில் சோனம் கல்யாணம் நடக்க வேண்டும் என்று ஜோசியர் சொன்னாரோ அதே தேதியில் தான் ஸ்வரா பாஸ்கரின் தம்பி கல்யாணமும் நிச்சயிக்கப்பட்டது. அவ்வளவு தான், சோனம்-ன் முகம் சோகத்தில் வாடியது.
/tamil-ie/media/media_files/uploads/2018/05/swara-bhaskar-at-sonam-kapoor-wedding-300x169.jpg)
உடனே இரண்டு தோழிகளும் இணைந்து சூப்பர் பிளேன் போட்டார்கள். ஸ்வரா பாஸ்கரின் தாயிடம் பேசி எப்படியாவது தம்பியின் திருமணத் தேதியின் தள்ளி வைக்குமாறு கேட்டார் சோனம். ஆனால் ஸ்வராவின் தாயிடம் இருந்து பிக் நோ சிக்னல் வந்தது. என்னடா இது சோதனை என்று யோசித்த இவர்கள், உடனே சோனம் கபூரின் தாயை கன்வின்ஸ் செய்து திருமண தேதியை மாற்றினார்கள். அடுக்கடுக்காக வந்த சோதனை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வழியாக மே 8ம் தேதி நடந்து முடிந்தது.
தோழி ஸ்வரா பாஸ்கர் கல்யாணத்தில் நிச்சயம் இருக்க வேண்டும் என்று பல விமர்சனங்களை மீறி தனது திருமணத் தேதியையே தள்ளி வைத்த சோனம் கபூருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.