திமிரு‌ பட ஈஸ்வரி ஞாபகம் இருக்கா? அந்த குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்; உலக அழகிக்கே டப்பிங் பேசியவர்!

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பெண் கதாபாத்திரங்களுக்குத் தனது குரல் மூலம் உயிர் கொடுத்த பிரபல குரல் கலைஞர் ஜெயகீதா, தனது திரையுலகப் பயணம் மற்றும் மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து கலாட்டா பிங்க் யூடியூப் சேனலில் நடத்திய நேர்க்காணலில் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பெண் கதாபாத்திரங்களுக்குத் தனது குரல் மூலம் உயிர் கொடுத்த பிரபல குரல் கலைஞர் ஜெயகீதா, தனது திரையுலகப் பயணம் மற்றும் மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து கலாட்டா பிங்க் யூடியூப் சேனலில் நடத்திய நேர்க்காணலில் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Famous Tamil Dialogues

திமிரு‌ பட ஈஸ்வரி ஞாபகம் இருக்கா? அந்த குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்; உலக அழகிக்கே டப்பிங் பேசியவர்!

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பெண் கதாபாத்திரங்களுக்குத் தனது குரல் மூலம் உயிர் கொடுத்த பிரபல குரல் கலைஞர் ஜெயகீதா, தனது திரையுலகப் பயணம் மற்றும் மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து கலாட்டா பிங்க் யூடியூப் சேனலில் நடத்திய நேர்க்காணலில் பகிர்ந்து கொண்டார். அந்தப் பேட்டியில், தான் குரல் கொடுத்த பல்வேறு திரைப்பட, விளம்பர வசனங்களை மீண்டும் பேசி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

பிரபல வசனங்களுக்குப் பின்னால் உள்ள குரல்:

Advertisment

ஜெயகீதா, தான் குரல் கொடுத்த பல்வேறு திரைப்பட வசனங்களை நினைவு கூர்ந்தார். 'சம்திங் சம்திங்' திரைப்படத்தில் "சந்தோஷ் ஹல்வா... இதுல சுகர், கேஷுநட்ஸ், கிஸ்மிஸ்ஸோட இந்த மிஸ் கிஸ்ஸையும் சேர்த்திருக்கேன்!" என்ற வசனம், இன்றளவும் பலராலும் ரசிக்கப்படும் ஒரு பிரபலமான டயலாக் என்றார். 

அதேபோல், 'அண்ணாமலை' சீரியலில் தேவதர்ஷினி பேசிய "மாமா மாமா... இந்த பூ வச்சிருக்கேன் நல்லா இருக்கேனா?" மற்றும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பேசிய "ஆனாலும் நான் சந்தோஷமா இருப்பேன்!" போன்ற உணர்வுப்பூர்வமான வசனங்களையும் அவர் பேசி அசத்தினார். 'சச்சின்' திரைப்படத்தில் பிபாஷா பாசுவுக்குக் குரல் கொடுத்த அனுபவம் குறித்தும், "சச்சின் பேசின விதம்... என்னை இக்னோர் பண்ண விதம்... அவன் சிரிப்பு... க்யூட்... ஜஸ்ட் க்யூட்!" என்ற வசனத்தின் தனித்துவம் குறித்தும் அவர் பேசினார்.

சவாலான கதாபாத்திரங்களுக்குக் குரல்:

மகாபாரதத்தில் பாஞ்சாலியின் உணர்ச்சிமிக்க வசனங்களுக்குக் குரல் கொடுத்தது சவாலான அனுபவம் என ஜெயகீதா குறிப்பிட்டார். குறிப்பாக, துகிலுரிதலுக்குப் பிந்தைய, "இனி திரௌபதி தம்முடைய மருமகள் அல்ல..." எனத் தொடங்கும் வலி நிறைந்த வசனத்தை அவர் பேசிக் காட்டினார். 'கந்தா கடம்பா கதிர்வேலா' போன்ற படங்களில் நடிகை ரோஜாவின் ரகடா கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும், அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு குரலை மாற்றிப் பேசியதாகவும் தெரிவித்தார்.

நகைச்சுவை முதல் அதிரடி வரை:

Advertisment
Advertisements

90-களில் பிரபலமான "தனலட்சுமி ஜெயலட்சுமி சுபலட்சுமி சூப்பர் பம்பர் குழுக்கள்!" என்ற விளம்பரத்திற்கும், 'தம்பிக்கோட்டை சங்கீதா' திரைப்படத்தில் சங்கீதா பேசிய நீண்ட, மூச்சு விடாத அதிரடி வசனத்திற்கும்தான் தான் குரல் கொடுத்ததாகக் கூறினார். "இந்த பாண்டியம்மா ஒரே ஆளு... ஒட்டுமொத்த காலேஜையும் சேர்த்து கொளுத்தி தள்ளிடுவேன்!" என்ற வசனத்தைப் பேசிய விதம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

வில்லியாக மாறிய அனுபவம்: 'திமிரு' திரைப்படத்தில் ஸ்ரேயா ரெட்டிக்கு வில்லி கதாபாத்திரத்திற்கு முதல் முறையாகக் குரல் கொடுத்த அனுபவம் குறித்து ஜெயகீதா பேசினார். ஆரம்பத்தில் சாஃப்டான கதாபாத்திரங்களுக்கு மட்டுமே குரல் கொடுத்து வந்த அவர், இந்த படம் தான் தன்னை ஒரு 'ரகடா வில்லியாக' மாற்றியதாகக் கூறினார். "ஐ வான்ட் எ பிரதர்... ஐ வான்ட் யூ... யூ லாஸ்ட்... டேம் இட்... யூ லாஸ்ட்!" என்ற அந்த வசனம், சமூக வலைத்தளங்களில் இன்றும் ரீல்ஸ்களில் பிரபலமாக உள்ளது.

'மதராசப்பட்டினம்' திரைப்படத்தில் எமி ஜாக்சனுக்குக் குரல் கொடுத்தது, "மூணு குழந்தைங்க பெத்துக்கணும்... பாக்குறதுக்கும் பழகுறதுக்கும் அவங்க உங்கள மாதிரியே இருக்கணும்..." என்ற வசனம் எனப் பல்வேறு காலகட்டங்களின் உணர்வுகளைத் தனது குரல் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் ஜெயகீதா. தனது குரல் பயணம் தொடர்வதாகவும், தொடர்ந்து புதிய கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tamil Cinema Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: