செம்பருத்தி டீ குடித்தால், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் குறைகிறது என்று நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், இதை பார்த்த மருத்துவர் ஒருவர் செம்பருத்தி பூவில் எந்த மருத்துவ குணமும் இல்லை. நயன்தாரா சொல்வது பொய் என்று பதிவிட்டுள்ளது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இருந்த நிலையில், தற்போது தமிழில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேபோல் அவரது கணவர், விக்னேஷ் சிவன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இருவரும் திரையுலகில் பிஸியாக நட்சத்திரங்களாக வலம் வரும் நிலையில், தனியாக பிஸினசும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நயன்தாரா இந்தியாவில், அழகுசாதன பொருட்கள் முதல் சானிட்டரி நாப்கின்கள் வரை பெண்களுக்கு தேவையான பல பொருட்களை விற்பனை செய்து வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா, தான் விற்பனை செய்து வரும் பொருட்கள் தொடர்பான விளம்பர படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல் தனிப்பட்ட முறையில் சில கருத்துக்கள் மற்றும் மருத்துவ குறிப்புகளையும் பகிர்ந்து வருகிறார்.
இதில் சமீபத்தில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செம்பருத்தி டீ குடிப்பது சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு நல்லது. நான் தினமும் செம்பருத்தி டீ குடித்து வருகிறேன். என்று பதிவிட்டு செம்பருத்தி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தார். மேலும் இந்த டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தனக்கு கூறியவரின் ஐடி-யை டேக் செய்து மேலும் விபரங்கள் வேண்டுமானால் இவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
This is cinema actress Nayantara who has more than twice the following of the other actress Samantha miselading her 8.7 million followers on a supplement called hibiscus tea.
— TheLiverDoc (@theliverdr) July 29, 2024
If she had stopped at hibiscus tea is kind of tasty, that would have been ok. But no, they have to go… pic.twitter.com/d1fQCohsGU
இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இதனை பார்த்த கல்லீரல் மருத்துவர் பிலிப் என்பவர், நயன்தாரா சொல்வது போல் செம்பருத்தி பூவில் எந்த ஆரோக்கிய நன்மையும் இல்லை. இது பற்றி அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. செம்பருத்தி டீ சாப்பிடுங்கள் அது நன்றாக இருக்கும் என்பதோடு நயன்தாரா நிறுத்தியிருக்கலாம். ஆனால் 8.7 மில்லியன் ஃபாலேயார்களை வைத்திருக்கும் நயன்தாரா, உடல்நலம் பற்றிய தனக்கு தெரியாத தவறான தகவல்களை எப்படி கொடுக்கலாம்?
Post deleted. But no apology. No accountability. Like a surgical strike on public health. Need laws to curb this kind of behavior from celebrities community and empower and support registered medical practitioners (non-Ayush) to provide evidence-based scientific education to… pic.twitter.com/kTbXzSxbzh
— TheLiverDoc (@theliverdr) July 29, 2024
உண்மையில் ஆண்கள் இந்த செம்பருத்தி டீ குடித்தால், டெஸ்டஸ் பாதிக்கப்படும். பெண்கள் அந்த டீயை தினமும் குடித்து வந்தால், பூப்பெய்வது தள்ளிப்போவது மட்டுமல்லாமல், குழந்தையின் எடையில் பிரச்சனை வரும். செம்பருத்தி டீ குடிப்பது நல்லது அல்ல என்று அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பதிவை நீக்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு பதிவை வெளியிட்ட நயன்தாரா, முடடாள்களுடன் விவாதிக்க விரும்பவில்லை என்று ஒரு கருத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த டாக்டர் பிலிப், பிரபலங்களுடன் நாங்கள் விவாதம் நடத்தவே கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இவர்கள் இருவரின் வார்த்தை விவாதங்கள் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.