ஆன்லைனில் ‘லீக்’கான டாக்டர்: முழுப் படத்தையும் முதல் நாளே பந்தி வைத்த தமிழ் ராக்கர்ஸ்

Sivakarthikeyan Doctor full movie leaked : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் முதல்நாளே ஆன்லைனில் லீக்; படக்குழு அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ’டாக்டர்’ படம், முதல் நாளே ஆன்லைனில் முழுப்படமும் தமிழ்ராக்கர்ஸால் லீக் செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் SK புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ராஜேஷின் KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ’டாக்டர்’. இதில் சிவகார்த்திக்கேயன் ஹீரோவாக நடித்துள்ளார். வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, மிலிந்த் சோமன், இளவரசு, ஷாஜி சென், தீபா சங்கர், ரெடின் கிங்ஸ்லி, அருண் அலெக்சாண்டர், அர்ச்சனா மற்றும் ஜாரா வினீத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்து உள்ளார். 2020 ஆம் ஆண்டே தயாரான இந்தப் படம் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்தப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அதிரடி மற்றும் த்ரில்லர் படமான டாக்டர் இணையத்தில் அற்புதமான விமர்சனங்களைப் பெற்று வருவதோடு, சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் திரையரங்குகளில் இருந்தும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எதிர்பார்த்தபடி, படத்தின் கருத்து, கதைக்களம் மற்றும் வசனங்களை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.

படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகள், நடிகர்களின் நடிப்புத் திறன், குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பு ரசிகர்களிடமும் பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இவ்வளவு நாள் இந்த படம் தியேட்டர் வெளியிட்டிற்காக காத்திருந்தது மற்றும் படத்திற்கான ஹைப்புக்கு படம் உரித்தானது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

உண்மையில், டிஜிட்டலில் வெளியிடாமல் தியேட்டரில் வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சுவாரஸ்யமாக, இந்த படத்தின் வெற்றியை சிவகார்த்திகேயன் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தனர். காரணம் நெல்சன் திலீப்குமார்-விஜய் கூட்டணியில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் டாக்டர் படத்தின் வெற்றியால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால், இந்த பிரச்சனைகளுக்கிடையில், டாக்டர் படம் ஆன்லைனில் பைரஸி அடிப்படையிலான தளங்கள் மற்றும் டெலிகிராம், தமிழ்ராக்கர்ஸ் மற்றும் மூவியூல்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் முழுப்படம் லீக் செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியிடப்பட்ட ஒரு படம் ஆன்லைனில் கசிந்தது இது முதல் முறை அல்ல. சமீபத்தில், பேய் மாமா மற்றும் லாபம் போன்ற படங்களும் திரையரங்குகளில் வெளியான சில மணிநேரங்களில் ஆன்லைனில் கசிந்தன. துரதிருஷ்டவசமான இந்த லீக் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது, ஏனெனில் ரசிகர்கள் படக்குழுவினரின் முயற்சிகளை மதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும், இதுபோன்ற திருட்டு அடிப்படையிலான தளங்கள் மற்றும் வலைத்தளங்களுக்குப் பதிலாக தியேட்டர்களில் மட்டுமே படத்தைப் பார்க்கும்படி மக்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த படத்தின் லீக்கால், பாக்ஸ் ஆபிஸில் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Doctor tamil movie released doctor full movie leaked on tamilrockers to free download

Next Story
Bigg Boss Tamil 5: நமீதா வெளியேற்றம்? லேட்டஸ்ட் ப்ரோமோ ஷாக்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com