வீர தீர சூரன் vs எல்.2 எம்புரான்: என் மனைவி எந்த படத்தை முதலில் பார்ப்பார்? விக்ரம் ஓபன் டாக்!

சமீபத்தில், ஷைலஜாவிடம் அவரது கணவர் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் அல்லது அவருக்குப் பிடித்த நடிகர் மோகன்லாலின் எம்புரான் ஆகிய படங்களில் முதலில் எந்தப் படத்தைப் பார்க்க போகிறீர்கள் என்று கேட்டபோது, அவர் பதில் சொல்ல முடியாமல் இருந்தார்.

சமீபத்தில், ஷைலஜாவிடம் அவரது கணவர் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் அல்லது அவருக்குப் பிடித்த நடிகர் மோகன்லாலின் எம்புரான் ஆகிய படங்களில் முதலில் எந்தப் படத்தைப் பார்க்க போகிறீர்கள் என்று கேட்டபோது, அவர் பதில் சொல்ல முடியாமல் இருந்தார்.

author-image
WebDesk
New Update
Mohanlal and Vikram Movie Update In tamil

தமழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் வரும் மார்ச் 27-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே நாளில் மோகன்லால் நடித்த லுசிபர் 2 எம்புரான் திரைப்படம் பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளதால், தனது மனைவி எந்த படத்தை முதலில் பார்ப்பார் என்று தெரியவில்லை என நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: ‘Don’t know which movie my wife will watch first, Mohanlal’s Empuraan or my Veera Dheera Sooran’, says Vikram: ‘I will watch both’

2025-ம் ஆண்டு 3-வது மாதம் முடிவுக்கு வர உள்ள நிலையில்,  முதல் காலாண்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் ஒரே நாளில் வெளியாகாத நிலையில், தற்போது இந்திய பாக்ஸ் ஆபிஸ் 2025 ஆம் ஆண்டின் முதல் பெரிய போட்டிக்கு தயாராகி வருகிறது, ஏனெனில் மூன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.

பிரபல நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 3-வது படமாக, மோகன்லால் நடித்த எல்2: எம்புரான் திரைப்படம் மார்ச் 27 (வியாழக்கிழமை) வெளியாக உள்ள நிலையில், எஸ்.யூ அருண் குமார் இயக்கத்தில் சியான்” விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள வீர தீர சூரன், இந்தியில் ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் வரும் மார்ச் 30-ந் தேதி வெளியாக உள்ளது.

Advertisment
Advertisements

இந்த 3 படங்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழ் நடிகர் விக்ரம் கொண்டாட இன்னும் அதிக காரணம் உள்ளது. அவர் நடித்த படம் ஒன்று வெளியாக உள்ளது. அவருக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவராக இருக்கும் மோகன்லால் நடிப்பில் வெளியாக உள்ள எம்புரன் திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படம் பான் இந்தியா அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் மிகவும் சுவாரஸ்யமாக, விக்ரமின் மனைவி ஷைலஜா பாலகிருஷ்ணன் விக்ரமை விட மோகன்லாலின் தீவிர ரசிகை. சமீபத்தில், ஷைலஜாவிடம் அவரது கணவர் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் அல்லது அவருக்குப் பிடித்த நடிகர் மோகன்லாலின் எம்புரான் ஆகிய படங்களில் முதலில் எந்தப் படத்தைப் பார்க்க போகிறீர்கள் என்று கேட்டபோது, அவர் பதில் சொல்ல முடியாமல் இருந்தார்.

Mohanlal and Vikram Movie Update In tamil

இது குறித்து விக்ரம் கூறுகையில், நான் அவரிடம் எந்தப் படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்று கேட்டேன், இரண்டையும் பார்ப்பேன் என்று சொன்னாள். நானும் இரண்டையும் பார்ப்பேன், ஆனால் முதலில் எதைப் பார்ப்பாள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு மலையாளம் கொஞ்சம் தெரியும்; அவள் நன்றாகப் மலையாளம் பேசுவாள். இப்போது, மலையாளம், தமிழ், தெலுங்கு என்று எதுவும் இல்லை, இந்தியாவில் எல்லாம் ஒன்றுதான். வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு கலாச்சாரங்கள், அதை அனுபவிப்போம், ”என்று கேரளாவில் ஊடகங்களுடனான உரையாடலின் போது விக்ரம் கூறியுள்ளார். மேலும், வீர தீர சூரன், எம்புரான் ஆகிய இரண்டு படங்களும் பார்வையாளர்களால் சமமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடிக்கும் வீர தீர சூரன் படத்தை எச்.ஆர். பிக்சர்ஸ் ரியா ஷிபு தயாரித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் கையாளுகிறார், எடிட்டிங் பிரசன்னா ஜி.கே மற்றும் இசை ஜி.வி. பிரகாஷ் குமார்.
2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்களில் ஒன்றான எம்புரான், பிருத்விராஜின் இயக்குனரான அறிமுகமான லூசிஃபர் (2019) படத்தின் இரண்டாவது பாகமாகும். மோகன்லால் மற்றும் பிருத்விராஜைத் தவிர, இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் முதல் பாகத்தில் இருந்த தங்கள் வேடங்களில் மீண்டும் நடித்துள்ளனர். 

Mohanlal Vikram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: