பட்ஜெட் ரூ.90 கோடி; வசூல் ரூ.900 கோடி... ஓ.டி.டி-யை தெறிக்க விட்ட திகில் படம்

திகில் படங்கள் எப்போதும் மக்களிடையே ஒரு தனி வரவேற்பை பெறுகின்றன. சமீபத்தில், எந்த மொழியிலான படமாக இருந்தாலும், மக்கள் திகில் படங்களை அதிக விருப்பத்துடன் பார்ப்பதைக் காணலாம்.

திகில் படங்கள் எப்போதும் மக்களிடையே ஒரு தனி வரவேற்பை பெறுகின்றன. சமீபத்தில், எந்த மொழியிலான படமாக இருந்தாலும், மக்கள் திகில் படங்களை அதிக விருப்பத்துடன் பார்ப்பதைக் காணலாம்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-21 222002

திகில் படங்கள் என்றாலே மக்களின் மத்தியில் ஒரு தனிச்சுவை மற்றும் எதிர்பார்ப்பு இருக்கும். பயம், பரபரப்பு, எதிர்பாராத திருப்பங்கள் என அனைத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும் இந்த வகை படங்களுக்கு எப்போதும் ஒரு நிலையான வரவேற்பு உள்ளது.

Advertisment

பெரும்பாலானவர்கள் "பயமா இருக்கும்" என்றாலும் கூட, அடுத்த நிகழ்வில் என்ன நடக்கப்போகிறது என்ற ஆவல் காரணமாகவே தொடர்ந்து பார்க்கத் துணிகிறார்கள்.

இன்று திகில் படங்கள் எந்த மொழியிலானதாக இருந்தாலும், மக்கள் அதை ஆர்வமுடன் ரசிக்கிறார்கள். ஹாலிவுட் முதல் தென்னிந்திய திரைப்படங்கள் வரை, திகில் கலந்த கதைகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.

குறிப்பாக ஓடிடி தளங்கள் வருவதற்கு பிறகு, திகில் படங்களை பார்க்கும் வாசதி மேலும் பெருகியுள்ளது. வீட்டிலிருந்தபடியே, இரவு நேரங்களில் ஒளியற்ற அறையில் ஒரே மூச்சில் ஒரு திகில் படத்தை பார்க்கும் அனுபவம், பலருக்கும் ஒரு அலாதி உற்சாகம்.

Advertisment
Advertisements

அந்த வகையில், தற்போது ஓடிடியில் எத்தனை திகில் படங்கள் இருப்பதால், "எதை பார்ப்பது?" என்ற குழப்பம் ரசிகர்களிடையே உள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில், ஒரு நல்ல திகில் படத்திற்கான பரிந்துரை தேவைப்படுவது இயல்பானது.

அந்த வகையில், தற்போது பரிந்துரை செய்யப்படுவது இந்தத் திரைப்படம் — இது நிச்சயமாக திகிலையும், சுவாரஸ்யத்தையும் திருப்திகரமாக வழங்கும். பயமென்றாலும், திருப்பங்களும், கதையின் இறுதிக்குள் வரும் அதிர்ச்சியும், உங்கள் எதிர்பார்ப்புக்கு மேல் அமையும்.

எனவே, திகில் திரைப்பட ரசிகர்களே! ஓடிடியில் என்ன படம் என்று குழப்பமடைந்திருந்தால், இந்தப் படம் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும்.

இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இது இன்னும் சிறந்த திகில் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தப் படத்தின் முதல் பாகம் ரூ.180 கோடியை வசூலித்தது. இரண்டாவது பாகம் ரூ.900 கோடி வரை வசூலித்து மாபெரும் ஹிட்டடித்தது.

அந்தப் படம் தான் இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ஸ்திரீ’, ‘ஸ்திரீ 2’. இந்த இரண்டு பாகங்களும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

நடிகை ஷ்ரத்தா கபூர் முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பங்கஜ் திரிபாதி, அபர்சக்தி குரானா, அபிஷேக் பானர்ஜி போன்ற நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முழுப் படமும் மிகவும் சுவாரஸ்யமாகவும், அதே சமயம் நகைச்சுவையாகவும் நகரும். திகில், திருப்பங்களுடன் போரடிக்காமல் நகரும் திரைககதை படத்தின் பலம்.

இந்தப் படம் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் கதை மத்தியப் பிரதேசத்தில் உள்ள சந்தேரி என்ற கிராமத்தில் நடக்கிறது. இந்த கிராம மக்கள் ஒரு புராணக்கதையை நம்புகிறார்கள்.

அதாவது, அங்கு நான்கு நாட்கள் ஒரு திருவிழா நடத்தப்படுகிறது. அதில் பெண் ஆவி ஆண்கள் தனியாக இருக்கும்போது அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறது. ஆண்கள் யாராவது திரும்பிப் பார்த்தால், அவர்கள் கடத்தப்படுகிறார்கள்.

மறுபுறம், அந்த கிராமத்தில் ஒரு தையல்காரர், ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூரை காதலிக்கிறார். ஷ்ரத்தா கபூர் பண்டிகை காலத்தில் நான்கு நாட்கள் வந்து செல்கிறார்.

அதன் பிறகு, அவர் காணாமல் போகிறார். நீண்ட காலமாக கிராமத்தை ஆட்டிப்படைக்கும் பெண் ஆவி ஷ்ரத்தா கபூர் என்று ராஜ்குமார் ராவ் மற்றும் அவரது நண்பர்கள் நம்புகிறார்கள். இதன் பிறகு என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக்கதை.

இந்த ஹாரர்-காமெடி படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கிறது.

இந்த படம் IMDb இல் 10 இல் 7.5 ரேட்டிங்கை பெற்றுள்ளது. “ஸ்திரீ” , “ஸ்திரீ 2” இரண்டு படங்களும் ஓடிடியில் காணக்கிடைக்கின்றன.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: