சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வழியாக வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என நடிகை லட்சுமி வாசுதேவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் காணொலி ஒன்று வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் தனக்கு நேர்ந்த பிரச்னை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “எனக்கு குறுஞ்செய்தி மூலமாக ஒரு லிங்க் வந்தது.
-
நடிகை லட்சுமி வாசுதேவன்
அந்த லிங்கை தொட்டதும் எனது மொபைல் போன் ஹேக்கிங் செய்யப்பட்டது. தொடர்ந்து எனது போன் ஹேக் செய்யப்பட்டு எனது படங்கள் மார்பிங் செய்யப்பட்டன.
-
நடிகை லட்சுமி வாசுதேவன்
எனக்கு மிரட்டல்கள் தொடர்ந்தன. இந்தப் படங்களை எனது பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிடுவிவதாக கூறினார்கள்.
தொடர்ந்து இது குறித்து புகார் அளித்தோம். அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
-
நடிகை லட்சுமி வாசுதேவன்
மேலும், நான் செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள் எனவும் அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபகாலமாக லிங்க் அனுப்பி ஒருவரின் மொபைலில் உள்ள தனிப்பட்ட தகவல்களை திருடும் சைபர் குற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இதேபோல் ஆன்லைன் கடன் செயலி விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துவருகிறது.
இந்நிறுவனங்களும் இதேபோன்று மார்பிங் வேலைகளில் ஈடுபட்டுவருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil