dont watch vijay movies says madurai adheenam, இந்துமக்களை அவமதிக்கும் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருவதால் அவரது திரைப்படங்களை என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதுரை ஆதினம், கோவை காமாட்சி ஆதினம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மதுரை ஆதினம் ‘ பாரதியார் உயிரிடோடு இருந்திருந்தால் செந்தமிழ்நாடெனும் போதினிலே, இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என்று பாடி இருப்பார். மதுக்கடைகளின் ஆதிக்கம் அந்த அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்து மக்களை அவமதிக்கும் வகையிலான படத்தில் விஜய் நடிப்பதால் அவர் திரைப்படத்தை பார்க்க வேண்டாம். கோவியில்களுக்கு இன்று அரசியல் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று கூறுகிறார்கள். நாங்கள் அரசியல் பேசாமல் வேறு யார் பேசுவார்.

திருக்கோவிலின் சொத்துக்கள் இங்கே தொலைந்து போகிறது.தமிழ்நாட்டின் பண்பாடு கலாச்சாரமே திருக்கோயிலுக்குள்தான் உள்ளது. முதலில் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை. கோயில் இடங்களை ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் எடுத்துக்கொண்டுள்ளனர். இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டுமே திராவிடக் கட்சிகள் பாக்கி வைத்துள்ளது. திராவிடர் என்பதற்கு என்ன அர்தம் என்று சீமான் கேட்ட கேள்விற்கு இதுவரை யாரும் பதில் கூறவில்லை. அரசியல்வாதிகள் விபூதி பூசுவதில்லை. ஆனால் ரம்ஜான் பண்டிகையின்போது மட்டும் குல்லா போட்டுக்கொள்கிறார்கள். கோவிலில் என்ன நடக்கிறது என்றே அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிவதில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் ஊர் பெரியவர்களின் தலைமையில்தான் கோவில்கள் இயங்க வேண்டும். சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும்போது தருமபுரம் ஆதினத்தை ஏன் பல்லக்கில் தூக்க கூடாது என்று அவர் கூறினார்.