“இரட்டை வரி சினிமா ரசிகர்களைக் குறைத்துவிடும்” - இயக்குநர் வெங்கட்பிரபு

தமிழக அரசு அறிவித்துள்ள கேளிக்கை வரியால் திரையுலகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த வரி ரசிகர்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும் என்கிறார், வெங்கட் பிரபு.

* “தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை வருத்தமளிப்பதாக இருக்கிறது. இரட்டை வரி என்பது மிகவும் மோசமானது. இந்த இரட்டை வரி என்பது, அதிகமாக உள்ள சினிமா ரசிகர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும். இதனால், ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியுமே பாதிக்கப்படும். இதற்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவோம்” என்று இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

* சந்தானம், வைபவி ஷாண்டில்யா நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் டிரெய்லர், வருகிற 14ஆம் தேதி ரிலீஸாகிறது. சேதுராமன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், காமெடியனாக விவேக் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சந்தானத்தின் அறிமுகப் பாடலுக்கு, ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல் மற்றும் ஜானி என 5 கொரியோகிராபர்கள் நடனம் அமைத்துள்ளனர்.

* சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. மலையாளத்தில் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சினேகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்க, அனிருத் இசை அமைத்துள்ளார். வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தை, சென்னை சிட்டியில் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

* மலையாளத்தில் 250 படங்களுக்கும் மேல் நடித்தவர் சலீம் குமார். ‘கம்பார்ட்மெண்ட்’ என்ற படத்தின் மூலம் இவர் இயக்குநராக அறிமுகமானார். சுரேஷ் கோபி, கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கினார் சலீம். இந்தப் படம் ஆவரேஜ் வெற்றி பெற்றது. தற்போது, ஜெயராமை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார் சலீம். ‘தெய்வமே கைதொழும் கே.குமார் ஆகனம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளனர். ‘பாகுபலி’, ‘மெர்சல்’ படங்களின் கேரள விநியோக உரிமையை வாங்கிய குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close