பிப்ரவரி 21-ம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படம் திரைக்கு வந்தது. ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது.
படம் வெளியாகி இரண்டாவது வாரத்திலும் தொடர்ந்து இந்த படம் வெற்றிநடை போட்டு வருகிறது. முதல் மூன்று நாளிலேயே உலகளவில் ரூ.50 கோடி வசூல் செய்த டிராகன் படம் தற்போது இரண்டாவது வார முடிவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இரண்டே வாரத்தில் டிராகன் படம் ஓ.டி.டியில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆனால் டிராகன் படம் இந்திய ஓடிடியில் வெளியாகவில்லை.
வெளிநாட்டில் பணம் செலுத்தி பார்க்கும் ஒரு ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதன் மூலம் டிராகன் படத்தின் ஹெச்.டி பிரிண்ட் தற்போது இந்தியாவில் டெலிகிராம் போன்ற பைரஸி தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நகைச்சுவை-நாடக திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸில் திரையிடப்பட உள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் கண்காணிப்பு போர்ட்டல் சாக்னில்க் படி, உள்நாட்டில் ரூ .73 கோடியை குவித்துள்ளது. உலக அரங்கில், இந்த படம் மொத்த வருவாயில் ரூ. 115 கோடியைத் தாண்டியுள்ளது, இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ் படமாக டிராகன் பதிவு செய்துள்ளது.