கள்ளத் தனமாக மது விற்பனை: திரெளபதி பட நடிகர் கைது

தேவராஜிடம் இருந்து குவார்ட்டர் பாட்டில் ஒன்று ரூ.1000 கொடுத்து வாங்கி அதை 1200 ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார் திரெளபதி நடிகர் ரிஸ்வான்.

தேவராஜிடம் இருந்து குவார்ட்டர் பாட்டில் ஒன்று ரூ.1000 கொடுத்து வாங்கி அதை 1200 ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார் திரெளபதி நடிகர் ரிஸ்வான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Draupathi Actor Rizwan Arrested for Illegal Alcohol Sale

Draupathi Actor Rizwan Arrested for Illegal Alcohol Sale

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் லாக் டவுனில் உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்

Advertisment

இதனையடுத்து, சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க தெற்கு இணை ஆணையர் மகேஷ்வரி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு எம்.ஜி.ஆர் நகர் போலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா மெயின் ரோட்டிலுள்ள வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக திரெளபதி பட துணை நடிகர் ரிஸ்வான் (30) என்பவரை போலிசார் கைது செய்தனர்.

ரிஸ்வானின் வீட்டிலிருந்து 57 குவார்ட்டர் பாட்டில்கள், 12 பீர் பாட்டில்கள், ரூ.2300 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த தகவலின்படி சாலிகிராமத்தைச் சேர்ந்த சினிமா புரொடக்‌ஷனில் வேலை பார்க்கும் பிரதீப் (31) மற்றும் அவரது வாகன ஓட்டுனரான சூளைமேடு பகுதியை சேர்ந்த தேவராஜ் (41) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தேவராஜ் காரில் பதுக்கி வைத்து இருந்த 189 குவார்ட்டர் பாட்டில்கள், 20,000 பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment
Advertisements

சமீபத்தில் வெளியான திரௌபதி உள்ளிட்ட சினிமா படங்களில் நடித்த துணை நடிகரான ரிஸ்வான், தேவராஜிடம் இருந்து குவார்ட்டர் பாட்டில் ஒன்று ரூ.1000 கொடுத்து வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து சினிமா துறையில் உள்ள தனது நண்பர்களுக்கு ரூ.1200-க்கு விலை பேசி அதை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று சப்ளை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு என்ன – கமல்ஹாசன் பதில்

இதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் தேவராஜ் யாரிடமிருந்து, மதுபானம் வாங்கினார் என்பது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: