இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் என்.ஜி.கே, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் அண்மையில் நீண்ட நாள் காதலனான ஜாக்கி பகானி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இவரின் தம்பி, ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் கொக்கைன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்கையின் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஐதராபாத் காவல்துறை அமன் ப்ரீத் சிங் உள்ளிட்ட 13 பேரை கைது செய்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/43svlNTI2jjYKraO3a8J.jpg)
தெலங்கானா மாநில போதைப் பொருள் தடுப்பு தனிப்படை போலீசார் மற்றும் ராஜேந்திரநகர் போலீசார் இணைந்து சைபராபாத் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 5 நைஜீரியர்களை 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியாக அமன் ப்ரீத் சிங், அனிகேத் ரெட்டி, பிரசாத், மதுசூதனன், நிகில் டாமன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது செய்யயப்பட்டுள்ள திரைத் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“