முன்னணி சீரியல் நடிகைகளுக்கு டப்பிங் இந்த அம்மணிதானா? என்னா டேலன்ட்!

முன்னணி சீரியல்களான ரோஜா, பாரதி கண்ணம்மா, சத்யா, திருமதி ஹிட்லர் ஆகிய சீரியல்களின் நாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

dubbing artist akshayapraba, அக்‌ஷயபிரபா, akshayapraba video, roja bharathi kannamma, sathya, thirumathi hitler, டப்பிங் கலைஞர் அக்‌ஷய பிரபா, ரோஜா, பாரதி கண்ணம்மா, திருமதி ஹிட்லர், வைரல் வீடியொ, serial dubbing artist, akshayapraba video, viral video

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் முன்னணி சீரியல்களான ரோஜா, பாரதி கண்ணம்மா, சத்யா, திருமதி ஹிட்லர் ஆகிய சீரியல்களில் நாயகி நடிகைகளுக்கு குரல் கொடுப்பதை டப்பிங் கலைஞர் அக்‌ஷயபிரபா சில டயலாக்குகளை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் என்னா டேலண்ட் என்று அக்‌ஷயபிரபாவின் பின்னணி குரல் கொடுக்கும் திறமையை பாராட்டி வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல்தான் இந்த வாரம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக முதலிடம் பிடித்து வந்த விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த 2 சீரியல்கள்தான் தமிழ் டிவி சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா, திருமதி ஹிட்லர் ஆகிய சீரியல்கள் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே வரவேற்பைப் பெற்ற சீரியல்களாக உள்ளன.

இந்த நிலையில், ரோஜா, பாரதி கண்ணம்மா, சத்யா, திருமதி ஹிட்லர் ஆகிய சீரியல்களில் நாயகி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர் அக்‌ஷய பிரபா, இந்த 5 சீரியல்களின் நாயகி நடிகைகளும் பேசுவது போல டயலாக் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் 5 சீரியல் நடிகைகளுக்கு ஒருவரே குரல் கொடுக்கிறாரா? என்னா டேலண்ட் என்று வியந்து பாராட்டி வருகின்றனர்.

டப்பிங் கலைஞர் அக்‌ஷயபிரபா ரோஜா, சத்யா, திருமதி ஹிட்லர் ஆகிய சீரியல்களின் நாயகிகளின் நடிப்புக்கு பின்னணி குரலில் டயலாக் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dubbing artist akshayapraba speaks in roja bharathi kannamma sathya thirumathi hitler serial actress voices video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com