பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவி தனது காதலரை சமூக வலைதளம் மூலம் அறிமுகம் செய்து உள்ளார். 2012ம் ஆண்டு வெளியான சாட்டை படம் மூலம் டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் ரவீனா ரவி அறிமுகமானார்.
அமைரா தஸ்தூர், காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மடோனா செபாஸ்டியன், மாளவிகா மோகனன், ராஷி கன்னா மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளார். தொடர்ந்து படங்களிலும் ரவீனா ரவி நடிக்கத் தொடங்கினார்.
ஒரு கிடாயின் கருணை மனு, வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். குறிப்பாக மாமன்னன், லவ் டுடே படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரை தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். 'வாலாட்டி' என்ற படத்தை இயக்கிய இயக்குநர் தேவன் ஜெயக்குமார் என்பவரை ரவீனா ரவி காதலித்து வருகிறார். இருவரும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரவீனா ரவி காதலரை அறிமுகம் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“