உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற ஏ.ஆர். ரஹ்மான், தற்போது நலமுடன் வீடு திருபினார்.
நேற்றைய தினம் (மார்ச் 15) லண்டனில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் சென்னை திரும்பினார். இந்த சூழலில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் இயங்கி வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
அதன் பேரில், ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலம் குறித்து மருத்துவர்களை தொடர்பு கொண்டு கேட்டறிந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டார்.
அதில், "இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து ஏ.ஆர். ரஹ்மான் வீடு திரும்பினார். நீர்ச்சத்து குறைவு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/16/Xfr4qhyw4VTLLo2Z54sG.jpg)
இது குறித்து ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், "எங்கள் அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும், உங்கள் அன்புக்கும், பிரார்த்தனைக்கும், ஆதரவுக்கும் மனப்பூர்வமான நன்றிகள். நீர்ச்சத்து குறைவு காரணமாக என் தந்தை சற்று பலவீனமாக உணர்ந்தார், எனவே, நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சில வழக்கமான சோதனைகள் செய்தோம். ஆனால், அவர் இப்போது நலமாக இருக்கிறார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பான வார்த்தைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/16/aObYup3OnaldB0EbuUac.jpg)
உங்கள் அக்கறையையும், தொடர்ந்து அளித்து வரும் ஆதரவையும் நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம். உங்கள் அனைவருக்கும் மிக்க அன்பும் நன்றியும்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.