New Update
/indian-express-tamil/media/media_files/dushara-vijayan-x.jpg)
நடிகை துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன் இன்னும் சில ஆண்டுகளில் திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் 35 வயதுக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறியிருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன் இன்னும் சில ஆண்டுகளில் திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் 35 வயதுக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறியிருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை துஷாரா விஜயன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து யதார்த்தமாக நடிக்கும் நடிகையாக முத்திரை பதித்துவருகிறார். தமிழ் திரையுலகில் 2019-ம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகை துஷாரா விஜயன், ரசிகர்கள் மத்தியில் பெயரையும் புகழையும் பெற்று பிரபலமானார்.
சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘அநீதி’ உள்ளிட்ட படங்களில் துஷாரா விஜய நடித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’, தனுஷ் நடித்து வரும் ‘ராயன்’ மற்றும் சீயான் விக்ரம் நடித்து வரும் ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் எல்லாம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், தனுஷின் ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை துஷாரா விஜயன், தனுஷ் குறித்து பெருமையாக பல விஷயங்களைக் கூறினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை துஷாரா விஜயன், “என்னுடைய 35 வது வயதில் நான் திரையுலகில் இருந்து வெளியேறி விடுவேன், அதன் பிறகு நடிக்க மாட்டேன். 35 வயதுக்கு பிறகு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை துஷாரா விஜயனுக்கு தற்போது 26 வயது ஆகிறது, அதனால், அவர் இன்னும் 9 ஆண்டுகள் நடிப்பார் என்பது அவரது இந்த பேட்டியில் இருந்து தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் நல்ல நடிகையாக முத்திரை பதித்துவரும் துஷாரா விஜயன் இன்னும் சில ஆண்டுகளில் திரையுலகில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று கூறியிருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.