/tamil-ie/media/media_files/uploads/2023/01/maxresdefault-15.jpg)
தமிழ் திரைப்பட இயக்குநர் நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஈ. ராமதாஸ் மறைவை அவரது மகன் கலைச்செல்வன், சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அந்த பதிவில் “ எனது தந்தை மட்டும் இயக்குநரான நடிகர் ஈ. ராமதாஸ் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதி சடங்கு இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
ஈ.ராமதாஸ் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகப் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். விழுப்புரத்தைச் சேர்ந்த ராமதாஸ், சினிமாவில் வாய்ப்புத் தேடி சென்னை வந்தார். எழுத்தாளராக பயணத்தைத் தொடங்கிய இவர், பிறகு இயக்குநராக பல படங்களை இயக்கினார்.
ராஜா ராஜா தான், இராவணன். சுயம்வரம், ஆயிரம் பூக்கள் மலரட்டும், வாழ்க ஜனநாயகம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற திரைப்படங்கள் வெளியாகி, மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.