குஜராத் கலவரம் குறித்து சித்தரிப்பு: எம்புரான் பட தயாரிப்பாளர் அலுவலகத்தில் இ.டி ரெய்டு

2002 குஜராத் வன்முறையை சித்தரித்ததற்காக வலதுசாரி அமைப்புகள் எம்புரான் படத்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் பின்னணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2002 குஜராத் வன்முறையை சித்தரித்ததற்காக வலதுசாரி அமைப்புகள் எம்புரான் படத்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் பின்னணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Empuraan Movie Producer

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் பெரிய வரவேற்பை பற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலனின் வளாகத்தில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடைபெற்றது.  

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Empuraan producer Gokulam Gopalan’s premises raided by ED in Chennai

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் லூசிஃபர். மஞ்சுவாரியார், டவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், 5 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் 2-ம் பாகம் கடந்த மார்ச் 27-ந் தேதி வெளியானது. முதல் பாகத்தை இயக்கிய பிரித்விராஜ் இயக்கிய இந்த படத்திற்கு முரளி கோபி கதை எழுதியிருந்தார்.

மோகன்லால், மஞ்சுவாரியார, டவினோ தாமஸ் ஆகியோருடன் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்தில், கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்தும், இந்துக்களை இழிவுப்படுத்தும் விதமாக, காட்சிகளை சித்தரித்துள்ளதாகவும், வலதுசாரி அமைப்புகள் எம்புரான் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து மோகன்லால் மன்னிப்பு கோரி, ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

Advertisment
Advertisements

அதேபோல் முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சையாக காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் தேனி விவசாயிகள், எம்புரான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும், கோகுலம் பிலிம்ஸ் கோபாலனின், சென்னை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது இந்த சோதனையின் விவரங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஸ்ரீ கோகுலம் சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் என்பது விருந்தோம்பல், ஊடகம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் பங்குகளைக் கொண்ட கோபாலனின் கீழ் ஒரு முன்னணி நிறுவனமாகும். மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் கேரளாவில் வலதுசாரிகளிடமிருந்து சீற்றத்தைத் தூண்டியது, ஆர்எஸ்எஸ்ஸின் விமர்சனம் உட்பட, யாரையும் புண்படுத்தக்கூடிய காட்சிகள் அல்லது உரையாடல்களை நீக்க படத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று முதலில் கூறியவர் கோபாலன்.

இந்தப் படம் யாரையும் காயப்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல. படத்தில் வரும் எந்த வசனமோ அல்லது காட்சியோ யாரையாவது காயப்படுத்தியிருந்தால், தேவையான மாற்றங்களைச் செய்யுமாறு பிருத்விராஜ் சுகுமாரத்திடம் சொன்னேன். சில வார்த்தைகள் ஏற்கனவே மயூட் செய்யப்பட்டது. படத்தில் உள்ள சில விஷயங்களுக்கு எதிர்ப்பு உள்ளது. தேவையான மாற்றங்களைச் செய்யுமாறு இயக்குனரிடம் கேட்டுள்ளேன். நாங்கள் எந்த அரசியலிலும் ஈடுபடவில்லை," என்று கோபாலன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: