/indian-express-tamil/media/media_files/2025/09/09/screenshot-2025-09-09-121359-2025-09-09-12-14-36.jpg)
இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியலாக இருந்தது திருச்செல்வத்தின் எதிர்நீச்சல் சீரியல். இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த இந்த சீரியல் டிஆர்பியில் டாப்பில் இருந்த போது திடீரென முடிக்கப்பட்டது. இதனால், மனம் நொந்துப்போன ரசிகர்களுக்கு ஆறுதலாக எதிர்நீச்சல் சீரியல் 2 திங்கள் முதல் சனிவரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இயக்குநர் திருசெல்வம் 2002ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் மெட்டி ஒலி சீரியலில், இணை இயக்குனராக பணியாற்றினார். அதன்பிறகு திருச்செல்வம் இயக்குனராக கோலங்கள் என்ற தொடர் மூலம் அறிமுகமானார். இதில் தேவயானி அபி என்ற ரோலில் நடித்திருந்தார். ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த தொடர் 2003ம் ஆண்டு தொடங்கி 2009ம் ஆண்டு முடிவடைந்தது. மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்த இந்த தொடருக்காக பல விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார். அதன்பின் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கினார்.
‘எதிர்நீச்சல்’ தொடரானது, ஒரு பெண் தன் வாழ்வில் எதிர்நீச்சலாக எதிர்களை தாண்டி முன்னேறும் விதத்தை காட்டுவதால், இன்று பல பெண்களுக்கு பாசிட்டிவ் சிந்தனையை ஊட்டும் தொடராக இருக்கிறது. திருச்செல்வத்தின் இயக்கத்தில், இந்த தொடர் சமூகத்தில் நிலவும் பாமரப் பிரச்சனைகளை சின்னத்திரை ஊடாக அழுத்தமாக பேசும் வலிமை பெற்றதொன்றாக விளங்குகிறது.
பல தொடர்களை இயக்கி திறமையான இயக்குநர் என்று பெயர் எடுத்த திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில், சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இதில், ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் உள்ள ஆண்களை திருமணம் செய்து கொண்டு, பல கஷ்டத்தை அனுபவிக்கும் பெண்களை மையப்படுத்தி இதன் கதைக்களம் இருந்தது. டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்த இந்த சீரியலில், குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து இறந்ததை தொடர்ந்து, அந்த கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்துள்ளார்.
இப்போது சமீபத்தில் அதில் தர்ஷினி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பேசுகையில், "எதிர்நீச்சல் சீரியல் ஒரு குடும்பம் மாதிரி. அதில் கனிகா மேம் கோமாவிற்கு சென்றது போல இருக்கிறது. அதனால் குடும்பம் பிரிதிந்த்து இப்போது ஷூட்டிங்கில் ஒருத்தரை ஒருத்தர் மிஸ் செய்து கொண்டிருக்கிறோம். அனால் சீரியல் முடிய போகிறதா என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்க்கு பதில் இயக்குனர் அவர்கள் தான் கூற வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.