New Update
/indian-express-tamil/media/media_files/Ii4Mrx3AXBkYzKA5teDz.jpg)
எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா
/
எதிர்நீச்சல் சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக நடிகர்கள், நடிகைகள் தங்கள் பதிவு மூலம் உறுதி செய்து வந்த நிலையில், நடிகை மதுமிதா நிறைவாக ஒரு புன்னகை என்று பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக, சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தங்கள் பதிவு மூலம் உறுதி செய்து வந்த நிலையில், நடிகை மதுமிதா நிறைவாக ஒரு புன்னகை என்று பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சன் டிவியில் பிப்ரவரி 7, 2022-ல் ஒளிபரப்ப்பாகத் தொடங்கிய எதிர்நீச்சல் சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மனம் கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 8-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் சத்யப்பிரியா, வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, கனிகா, மதுமிதா, விபுராமன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எதிர்நீச்சல் சீரியல் முடிவடைய உள்ளதை இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தி வருகின்றனர்.
இந்த சீரியலில் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிப்பவர் நடிகை மதுமிதா. இவர் இத்தொடரில் ஜனனி பாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா சீரியல் பற்றி முடிவு பற்றி ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
நடிகை மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நிறைவாக ஒரு புன்னகை’ என பதிவிட்டுள்ளார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுத்துகொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, எதிர்நீச்சல் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விபுராமன், எதிர்நீச்சல் இறுதிக் காட்சிகள் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.