உலக நாயகன் கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்காக பிரபல இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. #KH234 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் நவம்பர் 7ஆம் தேதி முதல் படப்பிடிப்புத் தளத்துக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#KH234 படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதற்கிடையில், படத்தின் எடிட்டராக தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத்தை தயாரிப்பாளர்கள் அழைத்து வந்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீகர் பிரசாத் இதற்கு முன்பு அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, துப்பாக்கி, கத்தி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும், எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களிலும் மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“