Advertisment

மலருக்கு திருமண நாள் பரிசு இதுதான்.. சர்ப்பிரைஸ் சொல்லும் வெற்றி!

இரண்டு ஜோடிகளும் தற்போது வெளியூருக்கு பறந்து செல்ல இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Eeramaana Rojaave today

Eeramaana Rojaave today

Eeramaana Rojaave today : ஈரமான ரோஜாவே சீரியலின் ஆடியன்ஸ் லெவல் வர வர அதிகரித்துக் கொண்டே செல்கிறது.வெற்றி - மலர் ரொமான்ஸ் டிஆர்பியில் முதலிடம் பிடிக்க காரணம் என்றால் அது மிகையல்ல.

Advertisment

சீரியலின் ஹீரோயின் மலர். அவரது தங்கையும் அதே வீட்டுக்கு மருமகளாக வருகிறார். இருவருமே இக்கட்டான சூழலில் அந்த வீட்டுக்கு திருமணமாகி வருகிறார்கள். ஆனால், வரதட்சணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீட்டுக்கு வந்த மருமகள்களை, பிறந்த வீட்டுக்கே அனுப்பி வைத்து விடுகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். இதற்கிடையே, ஒரு பணப் பிரச்சனையில், ஹீரோயின் மலர் குடும்பம் மிக மோசமாக அவமானப்படுத்தப்படுகிறது.

ஆனாலும் மலர் மீது அவரின் கணவர் வெற்றிக்கு கொள்ளை பிரியம். மலருக்கும் அப்படிதான். பல்வேறு காரணங்களால் இருவரும் ஒன்று சேர முடியாமல் பிரிந்து வாழ்த்து வருகிறார்கள். இருவருக்கும் இருக்கும் காதல் அனைவருக்கும் தெரியும். இருந்தும் மலர் விலகியே இருக்கிறார்.

இதற்கிடையில் வெற்றியை காதலிச்ச அஞ்சலி, இன்னும் வெற்றியை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஒருபக்க மலரின் தங்கை அவரின் கணவர் புகழிடம் இருந்து பயத்தில் தனித்து இருக்கிறார். இந்த இரண்டு ஜோடிகளும் தற்போது வெளியூருக்கு பறந்து செல்ல இருக்கிறது. முதல் வருட திருமண நாளை கொண்டாடும் வகையில் மலருக்கு சர்ப்பிரைஸ் ப்ளான் சொல்லி இருக்கிறார் வெற்றி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment