Vijay TV tamil serial, Eeramana Rojave, தமிழ் சீரியல்
Vijay TV Serial : ஈரமான ரோஜாவே சீரியல் மலர் வெற்றி, காதல் காதல் காதல் மட்டுமே என்று எப்போதும் காதலில் முக்கிய எபிசோடுகளாக ஒளிபரப்பாகி பொண்ணுங்க, பசங்க விரும்பிப் பார்க்கும் சீரியலாக இருந்து வருகிறது. உண்மை லவ்வர்ஸ் கூட மலர் வெற்றி லவ் பண்ணும்போது தாங்களும் போனில் லவ் பண்றாங்கன்னு ஊரே பேசிக்கறாங்க. இத்தனைக்கும் வெற்றியும் மலரும் கல்யாணம் ஆனவங்க. கல்யாணத்துக்குப் பிறகு ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்காம இருந்து, இப்போ பண்ற லவ் இருக்கே... அது உலக மகா லவ்வுடா சாமி.
வெற்றியை மலர், மாமா மாமா என்று கூப்பிட்டு உயிரா அவனையே சுத்தி சுத்தி வர்றா. அவள் மாமான்னு சொல்ல, இவன் சொல்லுடின்னு சொல்ல... சிலருக்கு பிடிக்குது, சிலருக்கு பிடிக்கலை. பிடிச்சவங்க ரசிக்கறாங்க, பிடிக்காதவங்க சானலை மாத்தறாங்க. மலர் வெற்றிக்குள் எப்படி இப்படி ஒரு காதல் வந்துச்சு? வெற்றியின் அண்ணனை காதலிச்ச மலர் அவனை கல்யாணம் செய்துக்க இருக்கும்போது, அவன் லாரி விபத்தில் இறந்துவிடுகிறான். உடனே காதலிச்சவன் தம்பிக்கு மலரை கல்யாணம் செய்து வச்சுடறாங்க.
இந்த ஒரு விஷயத்தை வச்சுத்தான் இவங்க ரெண்டு பேரையும் இணைச்சு, முதலில் ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு ஈர்ப்பு வரவழைச்சு, அப்புறம் காதலை சொல்ல வச்சு, இப்படியே இழுத்துக்கொண்டு இருக்க, எப்போதுதான் ரெண்டு பேருக்குள்ளே அது நடக்குங்கன்னு வாலி படம் கணக்கா காக்க வச்சுட்டாங்க. ஒரு வழியா அது நடந்து, இப்போது மலர் வெற்றி மூலமா குலம் தழைக்கணும்னு பெரியவங்க ஆசைப்படறாங்க.
சட்டையை மாட்டிகிட்டு நிக்கிறான் வெற்றி. அவனை பின்னால் வந்து கட்டிக்கொள்ளும் மலர், மெதுவாக மாமா என்கிறாள். என்னடி பொண்டாட்டி சொல்லுடீன்னு இவன் கேட்கிறான். மாமா ஐ லவ் யூ மாமான்னு அவள் சொல்கிறாள். இவனும் இவள் பக்கமாகத் திரும்பி நின்னு அவளை கட்டிக்கிட்டு ஐ லவ் யூடீ ன்னு சொல்றான்.