EIA 2020 என்ற புதிய சுற்றுச்சூழல் வரைவு அறிக்கைக்கு எதிராக நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நடிகர் சூர்யா.
விஜய் சேதுபதி ஹீரோயின்: மெகா ஸ்டார் குடும்ப வாரிசுக்கு நிச்சயதார்த்தம்
மத்திய அரசு சமீபத்தில் EIA 2020 என்ற புதிய சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு பொதுமக்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த புதிய வரைவு அறிக்கையில், உள்ள நன்மை, தீமைகளை மக்கள் புரிந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டும் என்றும், என எதிர்ப்பு தெரிவித்து உழவன் அறக்கட்டளை சார்பாக நடிகர் கார்த்தி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனை, “பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்” என #EIA2020 ஹேஷ்டேக்கில் ஷேர் செய்திருக்கிறார் சூர்யா. அவரின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”